Posts

Showing posts from 2012

விவசாயி கோடிசுவரரான கதை!

Image
ஒரு சாமானிய விவசாயி மரம் தங்கசாமி கோடிசுவரரான வெற்றிக் கதை! உங்களை ஒரு மா மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, “இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது? அதற்குள் நம் காலமே முடிந்துவிடும்” என்றுதான் போகும். ஆனால், தனக்கு மாம்பழம் கிடைக்குமா என எதிர்பார்க்காமல், தொடர்ந்து மா மர ங்களை நடுபவர்களால்தான் இந்த உலகம் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பது காலம் உணர்த்தும் உண்மை. அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுள் ஒருவர், மரம் தங்கசாமி! தனது பெயருடன் மரத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கும் தங்கசாமி, காடு வளர்ப்பில் உலகுக்கே இன்று ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். உலகின் பல பகுதிகளில் இருந்தும் வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தங்கசாமியின் தோட்டத்துக்கு வந்து பார்வையிடுகிறார்கள். தனி மனிதனாக அவர் செய்திருக்கும் சாதனைகள் பற்றி புத்தகம் எழுதுகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் - விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், ரொம்ப நாள் கழித்து உண்மையிலேயே வயிறு வலிக்க சிரித்து விட்டு வந்திருக்கிறேன், படத்தின் ஒளிப்பதிவாளரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தினை கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும் இப்படத்தினை பற்றி பார்ப்போம். முதலில் நாயகன் விஜய் சேதுபதிக்கு எனது வாழ்த்துக்கள், புதுசா வர்ர எல்லாருக்கும் இப்படி வித்தியாசமான கதைகள் அமையாது, இவரோட தென்மேற்கு பருவகாற்று, பீஸா, இப்ப ந.கொ.ப.கா மூனுமே வெவ்வேற கதைக்களம், புதுமுக இயக்குனர்கள், ஆனா நெஞ்சை தொடற கதை.   கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் பீஸால பயமுறுத்தி இருந்தார். படத்தோட ட்ரெய்லர் அ பார்த்துட்டும் வெள்ளிக்கிழமை சகப்பதிவர்கள விமர்சனத்தை பார்த்துட்டும் நேத்து போய் தியேட்டர்ல படம் பார்த்தேன். செம, கலக்கிட்டாங்க. மிடில் க்ளாஸ் ஹீரோ, 2 ஸ்கூல் ஃப்ரென்ட்ஸ், 1 ஆபிஸ் ஃப்ரெண்ட் கல்யாணத்துக்கு 2 நாள் முன்னாடி கிரிக்கெட் விளையாண்டு பால் அ மிஸ் பண்ணி கீழே விழுந்து மண்டைல அடிபட்டு சுமார் 1 வருசமா நடந்ததை முழுக்க மறக்கற ஹீரோவ ஆஸ்பிடல் கூட்டி போக ஆரம்பிக்கறப்ப படம் பயங்கர சூடு பிடிக்குது. தூங்கி எழுந்தா எல்லாம் ஞாபகத்துக்கு வந்த

கண்களை பார்த்துகொள்ளுங்கள்

Image
அன்பர்களுக்கு வணக்கம், அதிக நேரம் இனையத்தில் இருக்கும் நமக்கு கண்கள் வெகுவாய் பாதிக்க படுகின்றன. கண்களை பாதுகாக்க:-   1. உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது. 2. க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். 3. கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும். 4. மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும். 5. சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும். 6. பொதுவாக சூரி

வியக்க வைக்கும் தகவல்கள்

Image
நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது. சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது. பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது. நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும். கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம். மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள். மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார். பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும். உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான். ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்து விடலாம். பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலா

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

Image
(இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.) எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.     எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்: பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி. கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம். இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும். நிறைய கோயி

JUST GO WITH IT - REIVIEW

Image
அன்பர்களுக்கு வணக்கம், தீராத மின்வெட்டின் காரணமாக ஒரு படத்தை மூன்றாக பிரித்து மூன்று நாட்களில் பார்த்து முடிக்க வேண்டியாதாய் இருக்கிறது, நேற்று தீபாவளியினை முன்னிட்டு முழு நாளும் மின்சாரம் இருந்ததால் இந்த படத்தை பார்க்க முடிந்தது. படத்தின் பெயர் "JUST GO WITH IT" தமிழ்ல அது போக்குலய போலாம்னு கூட சொல்லலாம். நமக்கு எப்பவுமே பெருசா ட்விஸ்ட் இல்லைனாலும் பாஸிட்டிவ் க்ளைமாக்ஸ் இருக்க இந்த மாதிரி ரொமாண்டிக் காமெடி வகை படம் தான் ஆல் டைம் ஃபேவரட். சரி வாங்க படத்துக்கு போவோம். எல்லா நாட்டுலயும் எப்படி பொன்னுங்க ஒரே மாதிரி இருக்காங்களோ, அசிங்கமா இருந்தாலும் பராவாயில்லைனு ஒருத்தனை (ஹீரோ) கல்யாணம் பண்ணிகிட்டு அவனை அவன் குடும்பத்துலருந்து பிரிச்சு கூட்டி வந்து, அவன் டாக்டராகி சம்பாரிக்கற எல்லாத்தையும் ஆட்டய போட்டு பாய் ஃப்ரெண்ட்ஸ் கூட ஆட்டம் போட திட்டம் போடற ஒரு பொண்ணுகிட்ட இருந்து எஸ்கேப் ஆகி ஹீரோ பார்ல கல்யாண மோதிரத்தோட சரக்கடிக்கறப்ப, ஒரு பொண்ணுகிட்ட எதெச்சையா கல்யாணம் ஆனவன் மாதிரி சீன் போட செட் ஆகிருது, அதுலருந்து வாரம் வாரம் வெள்ளிக்கிழமை அந்த மோதிரத்தை வச்சுதான் ஒவ்வொர

கோதாவரி - ஃபீல்குட் காதல் படம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், என்னதான் தமிழ் சினிமாவில் சமிப காலங்களில் ஏதேதோ மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஃபீல் குட் படங்களின் எண்ணிக்கை சுத்தமாக குறைந்து விட்டது, வருபவர்கள் அனைவரும் சமுதாயத்தை திருத்துவதற்கும், நட்பிற்குமே படமெடுத்து தள்ளுகிறார்கள். இன்று நாம் பார்க்க போவது தெலுங்கில் வந்த ஒரு ஃபேல் குட் படம் "கோதாவரி"   தமிழில் 'இனிது இனிது' என்று ஒரு படம் வந்தது, அனைவரும் பார்த்திருப்பீர்கள், அதன் ஒரிஜினல் பதிப்பான "ஹேப்பி டேஸ்" படத்தினை இயக்கிய சேகர் கம்முலாவின் படம் தான் இந்த கோதாவரி. ரொம்ப நாளாக இனையத்தில் இருந்து எடுத்து வைத்து இருந்த படம். சரி கதைக்கு வருவோம். நாயகன் ராம் அமெரிக்காவில் படித்துவிட்டு மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று ஆளுங்கட்சிக்கு சென்று தன்னை சேர்த்து கொள்ளுமாறு கேட்டு அசிங்கபட்டு வரும் இயல்புக்கு புறம்பான குணம் படைத்தவன், இது போன்ற குணங்களால் நேசிக்கும் அத்தை மகள் ராஜியினை(நீது சந்த்ரா) மணக்க முடியாமால் IPS மாப்பிள்ளைக்கு விட்டு குடுக்கிறார். நாயகி சீதா(கமாலினி முகர்ஜி), அப்பா செல்லாமாக வளர்ந்து சொந்தமாக ஃபேஸன்

பவர்கட் பிரச்னையா...இன்றே சோலாருக்கு மாறுங்க !

Image
'பவர் கட் பிரச்னை, விரைவில் தீர்ந்துவிடும்' என்கிற நம் நம்பிக்கைதான், தீர்ந்துகொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு 3 மணி நேரம் என்று ஆரம்பித்தது... இன்று 12 மணி நேரம்... 16 மணி நேரம்... 18 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டே போகிறது. 'இனி, அரசாங்கத்தை நம்பி பலனில்லை' என்று உணர்ந்த மக்கள், 'இன்வர்ட்டர்'களை வாங்கினார்கள். ஆனால் , அந்த இன்வர்ட்டரில் சேமிக்கும் அளவுக்கான மின்சார சப்ளைகூட இல்லாத நிலையில், அதுவும் பல வீடுகளில் பயனற்றுக் கிடக்கிறது.   மாற்று வழியாக, சூரிய ஒளி மூலம் அவரவர் வீடுகளுக்கான மின்சாரத்தை அவரவர்களே தயாரித்துக் கொள்ளும் சோலார் முறையை அரசாங்கம் பரிந்துரைத்து, மானியமும் வழங்குவதாக அறிவித்திருப்பது உருப்படியான யோசனை. இதையடுத்து, அங்கொன்று... இங்கொன்று என்று சில வீட்டு மாடிகளில் மின்னுகின்றன சோலார் தகடுகள். 'பவர் இருந்தாலும் இல்லைனாலும் எங்க வீட்டுல பிரச்னை இல்லைங்க...’ என்று அதை உபயோகிப்பவர்கள் சர்டிஃபிகேட் தருகிறார்கள். மக்கள் மத்தியில் சோலார் பிளான்ட் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை பற்றிய விழிப்பு உணர்வு பெருக ஆரம்பித்திருக

வீட்டில் சோலார் பயன்படுத்துவது குறித்த தகவல்கள்

Image
அன்பர்களுக்கு வணக்கம், மின்வெட்டிற்கு சரியான நிவாரணம் சோலார்தான் என்பதை வலியுறுத்தி ஏற்கனவே சில பதிவுகள் போட்டு இருக்கிறேன், இப்போது அரசும் இதை ஒப்புக் கொண்டு விட்ட நிலையில், இணையத்தில் மேய்கின்ற பொழுது நான் படித்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வீட்டிற்கு சோலார் செல் மூலம் மின்சாரம் அளிக்க எவ்வளவு செலவு ஆகும்? மானியம் எங்கே கிடைக்கும்? என்பது பற்றிய கேள்விகளை வலை நண்பர்கள் கேட்டிருக்கின்றார்கள். என் நண்பர் ஒருவர் மகாராஷ்டிரா, புனாவில் சோலார் செல் பிசினஸ் நடத்துகிறார். அவரிடமிருந்து கேட்டுப் பெற்ற தகவல்களை இங்கே கொடுக்கிறேன். வீட்டிற்கு : உங்கள் வீட்டில் ஒரு மாதத்திற்கு சுமார் 100லிருந்து 150 யூனிட் வரை மின்சரம் செலவானால், ஒரு கிலோவாட் சோலார் சிஸ்டம் போதுமானது. (மின்சார பில் பல இடங்களில் 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் வரும். அதனால், 2 மாதத்திற்கு 200லிருந்து 300 யூனிட் செலவு என்று சொல்லலாம்). இதற்கு 2 லட்சம் வரை செலவாகும். உங்கள் கையிலிருந்து 1.1 லட்சம் செலவாகும். மீதி 90 ஆயிரம் ரூபாய் மானியமாகக் கிடைக்கும். உங்களுக்கு சோலார் சிஸ்டம் சப்ளை செய்யும் நிறுவன

தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்

Image
தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்று  மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.      மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சைமாவட்டம்), வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 9

நுகர்வோர்க்கான ஒரு விழிப்புணர்வு பார்வை !

Image
காசு கொடுத்துதானே பொருள் வாங்கிறோம் ….? நுகர்வோர்க்கான ஒரு விழிப்புணர்வு பார்வை ! அன்றாட வாழ்க்கையின் அவசரத்தில் நுகர்வோராய் இருக்கும் நாம் வியாபாரிகளை பல்வேறு காரணங்களுக்காக குற்றம் சொல்வோம் ஆனால் நுகர்வோரின் கடமைகள் என்ன? என்று நமக்குத் தெரியுமா? இது பற்றிய ஒரு விழிப்புணர்வு பார்வை இதோ… முக்கியப் பேருந்து நிலையங்கள் போன்ற, அவசரகதியாக மக்கள் கூடும் இடங்களில் அமைந்திருக்கும் கடைகளில் சென்று பொரு ட்களை வாங்கும் போது பார்த்தால், பெரும்பாலும் இரண்டு மூன்று ரூபாய் அதிகம் விலை வைத்தே விற்பனை செய்கிறார்கள். என்னது இது? எம்.ஆர்.பி இவ்வளவு தானே, ஏன் அதிகமான விலைக்கு இந்த பொருட்களை விற்கிறீர்கள் என்று கேட்டு விட முடியாது. அப்படிக் கேட்பின் சுற்றி நிற்பவர்களும், கடைக்காரரும் நம்மைப் பார்க்கும் பார்வை இருக்கிறதே… கொடுமை. அத்தனை ஏளனம் இருக்கும். நாம் வாங்குகின்ற பொருளுக்கு காசு குடுக்கின்ற நாம் எஜமானர்கள் கிடையாது. இது தான் நடப்பில் உள்ள நிதர்சனமான உண்மை. சரி, அதட்டித்தான் கேட்க வேண்டாம், “என்ன சார் இது? இப்டிப் பண்றீங்களே” என நியாயமான முறையில் கேட்டாலும் கூட… அதான் எல்ல

SALT n PEPPER மலையாளம் திரைவிமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், வரவர நண்பர்கள் கேலி செய்யும் அளவிற்கு மலையாள படங்களை பார்க்க துவங்கி விட்டேன், எப்போதும் தமிழனுக்கு தமிழ் பெண்களை விட மலையாளப் பெண்களைத்தான் அதிகம் பிடிக்கும், மறுக்கும் ஆண்கள் மறக்காமல் பின்னூட்டமிடவும், " 22 FEMALE KOTTAYAM " படத்திற்கு அந்த இயக்குனரின் படமான "SALT N PEPPER" படத்தினை மிகவும் விரும்பி தரவிறக்கம் செய்து பார்த்தேன்.   ஜாக்கி அண்ணன் எனக்கு முந்தி கொண்டார், அவர் எழுதிய இப்படத்தின் விமர்சனத்தில் பாலகுமாரனின் "ருசியை அறு" வாக்கியத்தினை மேற்கோள் காட்டி இருப்பார், நான் பாலகுமாரனின் தீவிர விசிறி, என் நடவடிக்கைகளில் பலவற்றினை மாற்றியது பாலகுமாரனின் எழுத்துக்கள் தான், ஆனால் என்னால் இன்னமும் ருசியை அறுக்க முடியவில்லை, இப்படத்தின் மென்மையான ஆழமான காதல் சொல்லப் பட்டுள்ளது. படத்தில் கதை நாயகன் நமது சண்டைக்கோழி வில்லன் "லால்" அகழ்வாராய்ச்சி துறையில் வேலை பார்ப்பவர், பெண் பார்க்கும் இடத்தில் பலகாரத்தினை ருசித்து சாப்பிட்டு சமையல்காரனை கையோடு கூட்டி வருபவர், பட ஆரம்பத்தில் சிறுவயது பள்ளியில் ஆசிரியர் உணவு சங்க

ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு

Image
ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு... -எல்.முருகராஜ் மதிய உணவு வேளை ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடு, அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஏவிஎம் உணவு விடுதி அருகில், காலில் செருப்பு கூட இல்லாதவர்கள், உடம்பில் சட்டை போடாமல் துண்டு மட்டும் கொண்டு இருப்பவர்கள், ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்த வேட்டியை அணிந்தவர்கள், நைந்து போன புடவையுடன் காணப்பட்டவர்கள் என சுமார் இருபது பேர் அந்த உணவு விடுதி அருகே, கண்களில் கவலையையும், கையில் ஒரு பையையும் வைத்துக்கொண்டு நின்றார்கள். சிறிது நேரத்தில் உணவு விடுதியில் இருந்து அழைப்பு வந்ததும் கையில் இருந்த ஒரு டோக்கனையும், ஒரு ரூபாயையும் கொடுத்துவிட்டு ஒரு பார்சல் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு திரும்பினர். பார்த்த நமக்கு ஆச்சர்யம், இந்த காலத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடா என்று! உள்ளே வாங்க விவரமா சொல்றேன் என்று மெஸ் உரிமையாளர் வெங்கட்ராமன் அழைத்துச் சென்றார், முதல்ல சாப்பிடுங்க என்று சூடான சாப்பாடை சாம்பார், ரசம், மோர் கூட்டு பொரியல், அப்பளத்துடன் வழங்கினார் சுவையாகவும், திருப்தியாகவும் இருந்தது. நீங்க சாப்பிட்ட சாப்பாட்டின் விலை இருபத்தைந்து ரூபாய், இந்த சா