WHATS YOUR NUMBER? பட்டியல் போட்டு காதலிக்கும் கதை- திரை விமர்சனம்


அன்பு நண்பர்களுக்கு, நீண்ட இடைவெளிக்கு பின் சொந்தமாக ஒரு திரைவிமர்சனம், என் நண்பன் ஒருவன் ஏன் எப்பொழுதும் ஆங்கில படத்திற்கு மட்டும் விமர்சனம் எழுதுகிறாய் என்று கேட்டான், தமிழ் படங்களை நான் மற்ற பதிவர்களின் விமர்சனத்தை பார்த்த பின்பே பார்ப்பேன், அதற்குள் குறைந்தது 20 பேராவது அந்த படத்தினை விமர்சித்திருப்பார்கள். அதனால்தான் இப்படி, சரி படத்திற்கு போவோம், "WHATS YOUR NO?"


 இந்த தலைப்பை பார்த்துவிட்டு கதை என்னவாக இருக்கும் என்று நான் பல விதங்களில் யோசித்து பார்த்தேன், ஆனால் இப்படி இருக்கும் என்று சத்தியமா எதிர்பார்க்கலிங்கோ?

படம் ஆரம்பிக்கும் போது, படுக்கையை விட்டு எழுந்து வந்து பாத்ரூமில் மேக் அப் போட்டு கொண்டு திரும்பவும் வந்து படுத்து அப்பொழுதுதான் தூங்கி எழுவது போல்  நடித்து கூட படுத்துருக்கவனை ஏமாத்தும் போதே நான் முடிவு பன்னேன், இது நம்ம ஊர் பொன்னுங்க மாதிரி சரியான தில்லாலங்கடினு, ஹீரோயினுக்கு எதிர் ஃபிளாட்ல குடியிருக்கறார் ஹீரோ, அவருக்கு அறிமுகம் எப்படினா ஷேம்ஷேமா வந்து வாசல்ல இருக்க நியுஷ் பேப்பர் அ எடுத்துகிட்டு கூச்சமே இல்லாம குட்மார்னிங் சொல்றார்,

இதே நம்ம ஊர் படமா இருந்தா 2 வீட்டுக்கும் நடுவுல ஜன்னல் வச்சு அதுல ஹீரோயின் ஒத்த கண்ணுல பார்த்து 3 டூயட் பாடினு கொன்னுருப்பாங்க, நம்ம ஊர்ல எனக்கு பிடிக்காத ஒரே விசயம் ஃபார்முலா, ஏன் ஹீரோயின் ஹீரோவ மட்டும்தான் லவ் பன்னனுமா? சரி நமக்கு எதுக்கு ஊர்வம்பு?
கதைப்படி வேலையை விட்டு அனுப்ப படுற ஹீரோயின் வீட்டுக்கு வர வழில பத்திரிக்கைல ஒரு கட்டுரைல சராசரியா ஒவ்வொரு பொன்னும் கல்யாணத்துக்கு முன்னாடி 10 பேர் கூட தாம்பத்யம் வச்சுக்கறானு போட்டுருக்கறத படிச்சுட்டு அப்பதான் தான் இதுவரைக்கு யார்யார் கூட எத்தனை பேர் கூட படுத்துருக்கங்கறத லிஸ்ட் எடுக்க ஆரம்பிக்கறா, சரியா 19 வருது, நம்ம ஊர்ல பாஞ்சாலிக்கு அப்புறம் பேர் வைக்கலை, 19 நா என்ன பேர் வச்சு கூப்புடறது தெரிஞ்சா யாராவது சொல்லுங்க,


சரினு தங்கச்சியோட நிச்சயதார்த்தத்துல சரக்கடிக்கும் போது தனக்கு சமமா எவளாவது இருக்காலானு விசாரிச்சு பார்த்தா யாரும் 12 அ தாண்டலை, எல்லாரும் என்ன சொல்லறாங்கனா 20 பேருக்குள்ள படுத்து கல்யாணம் பன்றவ குடும்ப குத்துவிளக்கு லிஸ்ட்ல வந்துருவாளாம், இல்லைனா ஐட்டமாம்,சரி இன்னும் லிஸ்ட் ல ஒருத்தன் பாக்கி இருக்கான்னு நினைச்சு நிம்மதியா சரக்கடிச்சுட்டு படுத்து தூங்கிடறா.

 காலைல எழுந்து பார்த்தா பக்கத்துல அவளை வேலைய விட்டு அனுப்பன பாஸ் படுத்துருக்கான், அதாவது லிஸ்ட் 20 அ தொட்டுருச்சு, சரி இவனையாவது கட்டிக்கலாம்னு பார்த்தா சரியான நாத்தம் பிடிச்சவனா இருப்பான், வேற வழியே இல்லை லிஸ்ட் ல இருக்க 20 குள்ள இருக்கவனைதான் கட்டியாகனும், எப்படி கதைல ட்விஸ்ட்?
 


 இப்பதான் ஹீரோவோட உஅதவி ஹீரோயினுக்கு தேவைப்படுது, எப்படினா லிஸ்ட்ல இருக்க ஒவ்வொருத்தனும் இப்ப எங்க இருக்கான், எப்படி இருக்கான்னு கண்டு பிடிச்சு தரனும், அதுக்கு பதிலா ஹீரோ தினமும் கரெக்ட் பன்ற பொன்னுங்களை கழட்டி விட ஹீரோயின் ஹெல்ப் பன்னுவாங்க, எப்படி?



 அப்புறம் என்னாங்க சொல்லனும்? இந்த விசயத்துல எல்லா நாட்டு படமும் ஒரே மாதிரி தான், எப்படி 2 பேருக்கும் நடுவுல காதல் மோதல் வருதுங்கறதுதான் மீதி கதை, ஆனா உண்மைலயே அதை அழகா சொல்லிருக்காங்க, படத்துல எனக்கு பிடிச்ச சில இடங்களோட புகைப்படங்களை இங்க வரிசையா போட்டுருக்கன், பாருங்க, முதல்ல நைட் திருட்டுத்தனமா பேஸ்கட்பால் விளையாடறது, பந்தயம் ஒவ்வொரு ஷாட்டுக்கும் துணிய கழட்டனும், எப்படி செம கேம்ல்ல?

அப்புறம் ஹீரோயினுக்கு ஹீரோவ பிடிச்சுருந்தாலும் லிஸ்ட்ல 20 ஃபில் ஆயிடுச்சு ஹவுஸ்புல் போர்ட் போட்டும் தன்னோட காதலை ஹீரோ வேற விதமா வெளிப்படுத்தற விதம், அது என்னன்னா "எனக்கு தோணுற வரைக்கும் முத்தம் குடுப்பேன்"னு சொல்லி நீளமா கிஸ் அடிக்கறது.

 அதுக்கு அப்புறம் அவங்களுக்குள்ள ஒரு சண்டை வருது, அதுக்கு அப்புறம் எப்படி அவங்க 2 பேரும் ஒன்னு சேர்ந்தாங்களா இல்லையானு படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க, ஆனா படம் முழுக்க அங்கங்க காமெடி, வசனமும் அப்படித்தான், நடு நடுவுல காதலையும் அழகா வெளிப்படுத்திருக்காங்க,

 படத்தோட கருத்து, காதல் வேற, காமம் வேற, ஒருதடவை ஒருத்தன் கூட படுக்கைய பகிர்ந்துக்கிட்ட ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி, இன்னோருத்தங்க மேல உண்மையான காதல் வராதுநு நினைக்கறது அடி முட்டாள்தனம்.

படத்தோட ட்ரெய்லர்



உங்க மனசுல என்ன தோனுனாலும் கொஞ்சம் நாகரிகமாக பின்னூட்ட்மிட்டு தெரிவிக்கவும்.



Comments

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்

கலாய்ச்சுட்டாராமாம்...