குடும்பஸ்தனாக இருப்பதற்கு ஒரு வாரம் விடுமுறை/ HALL PASS-REVIEW/திரை விமர்சனம்

 அன்பு நண்பர்களுக்கு இனிய வணக்கம். எல்லாரும் சிறு வயதில் ஹாலிவுட் என்றால் அனகோண்டா, காட்சில்லா மாதிரியான படங்களையும் அல்லது சூப்பர் மேன்,ஸ்பைடர் மேன், நார்னியா மாதிரியான படங்களையும் மட்டுமே விரும்பி பார்ப்போம். அதன் பின் காதல்மற்றும் ஆக்ஸன் படங்கள், உதாரணம் டைட்டானிக்,டெர்மினெட்டர்,க்ளாடியேட்டர். ஒரு 25 வயதிற்கு பின் வேலைப்பளுவை மனம் தாங்க முடியாமல் தினறும் சமயத்தில் பார்க்க தோன்றும் படம் தான் இந்த வகையான FEEL GOOD வகையான படங்கள். கதையென்று பெரிதாக ஒன்றும் இருக்காது. ஆனால் போரடிக்காமல் போகும். க்ளைமேக்ஸ் அதிக ப்ட்சம் பாஸிட்டிவ் ஆகத்தான் இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகும் படம் HALL PASS. 
 
நம்மில் சிலருக்கு இந்த பழக்கம் கட்டாயம் இருக்கும் என்று நம்புகிறேன். அதுதான் பெண்களை சைட் அடிப்பது, அங்கம் அங்கமாக ரசிப்பது, அவர்களை பற்றி நண்பர்களுடன் வேறு மாதிரி விவாதிப்பது போன்றவை, இந்த படத்தில் வரும் 2 ஹீரோக்களுக்கும் இதுதான் பொழப்பே. இவர்களையும் குறை சொல்ல முடியாது, ஏனென்றால் இவர்களுடைய மனைவி சரியாக கவனிப்பது இல்லை. அதற்கு காரணம் எங்கே இவர்கள் ரசிக்கும் பெண்களை நினைத்துக் கொண்டு தங்களுடன் உறவு வைத்துக் கொள்வார்களோ என்று.

ஆனால் நாளுக்கு நாள் 2 ஹீரோக்களும் எப்போது பார்த்தாலும் செக்ஸை பற்றி மட்டுமே அதிகமாக பேசுவது தெரிகிறது. அந்த நேரத்தில் தான் 2 ஹீரோயின்களுக்கும் HALL PASS பற்றி தெரிகிறது. ஒரு வாரம் கழுத்து சங்கிலியை அவிழ்த்து விடுவது. அதாங்க ONE DAY CM மாதிரி ஒரு வாரத்துக்கு பிரம்மச்சாரியாக ஆசைப்பட்டதை எல்லாம் செய்து கொள்ள கணவன்களுக்கு மனைவி அனுமதி குடுத்தல்.  
ஒரு முறை ஒரு நணபரின் வீட்டு பார்ட்டிக்கு  அங்கே அவருடைய மனைவி,குடும்பத்தை பற்றி அசிங்கமாக பேசுவதை எல்லாரும் ரகசிய கேமராக்களில் பார்த்துவிட மொத்தமாக செருப்பால் அடிக்காத குறையாக வெளியே தள்ளுகிறார்கள். வெறுத்து போய் முதல் ஹீரோயின் தன் கணவனுக்கு ஹால் பாஸ் குடுத்து 1 வாரம் குழந்தைகளுடன் அப்பா வீட்டுக்கு போய்விடுகிறார்.
இன்னோரு ஹீரோ தன் மனைவி இடங்குடுக்காத காரணத்தால் சென்டிமென்ட்டாக தன் காரிலேயே சூட்டை தணிக்க பார்க்க போலிஸ் பிடித்து அவமானமாகிறது. அவருக்கும் கிடைக்கிறது ஹால் பாஸ்.இப்படி கிடைத்த சுதந்திரத்தை வைத்து விருப்பப்பட்ட பெண்களுடன் சுத்த, தங்க திட்டமிடுகிறார்கள்.
ஆனால் இவர்களுக்கோ வயது 40 ஐ தாண்டிவிட்டது. யார் கிடைப்பார்கள்? வரும் பெண்களும் இவர்கள் ரசனைக்கு இல்லை. அதற்குள் இவர்களுக்கு ஹால் பாஸ் கிடைத்த விசயம் ஊர் முழுக்க பரவுகிறது.
இந்த கேப்பில் அப்பா வீட்டுக்கு போன ஹீரோயின்களுக்கு என்ன நடக்கிறது என்பது கிளைக்கதை. ஏனென்றால் எப்போதும் வயதான ஆண்களுக்குதான் துனை கிடைப்பது கஸ்டம், பெண்களுக்கு எல்லா வயதிலும் அவர்கள் பின்னால் சுத்த குறைந்தது 2 ஆண்களாவது இருப்பார்கள். முழுக்கதையையும் சொல்லி விட்டால் சுவாரசியம் போய்விடும். நீங்களே பாருங்கள்.
நான் ரசித்த வசனம்.
"ஆண்கள் பூனை மாதிரி, கதவை பிராண்டிட்டே இருக்காங்களா? கதவை திறந்து வெளிய விடு, ஒரு தடவை பார்த்துட்டு பயந்துட்டு திரும்ப உள்ள வந்தாங்கணா, ஆயுசுக்கும் வெளியே போக மாட்டாங்க"
கல்யாணமாகி இருவருக்குள்ளும் இடைவெளி விழுந்துருக்கும் ஒவ்வொரு கணவன் மனைவியும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். அதே நேரம் இவர்கள் படத்தில் அடிக்கும் கூத்தை பார்த்து சிரிப்பை அடக்காமல் இருக்க முடியாது. முடிந்தால் பாருங்கள்.
படத்தின் ட்ரெய்லரை பார்க்கனுமா?

வந்ததும் வந்தீங்க, அப்படியே கமெண்ட் அ போட்டு மத்தவங்ககிட்டயும் பகிர்ந்துக்குங்க.

Comments

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்

கலாய்ச்சுட்டாராமாம்...