பொறியியல் படிப்பு- ஒரு எளிய அறிமுகம்

அன்பர்களுக்கு வணக்கம், தற்போதுள்ள காலகட்டமானது மாணவர்கள் பள்ளி வாழ்க்கையை முடித்துக் கொண்டு கல்லூரிக்கு செல்லும் சமயம், அதிலும் தற்போது பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்துடுப்பது பொறியியல் (ENGINEERING) படிப்பினைத்தான். நானும் ஒரு பொறியாளர் என்ற வகையிலும் ஒரு தொழில்கல்லூரி ஒன்றினில் ஆசிரியராக பணியாற்றுவதாலும் இப்படிப்பு சம்பந்தமான தகவல்கள் தெரிந்து வைத்துள்ளேன், அதை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

முதலில் பொறியியலில் எண்ணற்ற பாடப்பிரிவுகள் உள்ளன, அதில் தமிழகத்தில் பெரும்பாலும் தேர்ந்துடுக்கப்படுவது ஆறு பிரிவுகளே, அவை முறையே 1.CIVIL 2.MECHANICAL, 3.EEE, 4.ECE, 5.COMPUTER, 6.IT.
 

ஒவ்வொரு பிரிவாக பார்ப்போம். முதலில் CIVIL-கட்டிடவியல். தொழில் படிப்புகளில் முதல் பிரிவு, பெரும்பாலோனோர், இத்துறையினை பற்றிய தெளிவான தகவல் இன்றி இருக்கின்றனர். இப்பிரிவில் படித்தால் வெயிலில் காயவேண்டும் என்பது பலரது எண்ணம். அது உண்மையல்ல. SOFTWARE ல் இருப்பவர்களுக்கு ஈடாக வருமானம் ஈட்டவும், அவர்களை போல் குளிரான அறையில் வேலை பார்க்கும் வாய்ப்பு இப்பிரிவு படிப்பவர்களுக்கும் உண்டு. எப்படியெனில் DESIGN துறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு தற்போது சென்னை மற்றும் பெங்களூரில் நல்ல வாய்ப்பு, ஆரம்பத்திலேயே 25000 வரையிலான சம்பளம் தர தயாராக இருக்கிறார்கள், அதிலும் இத்துறையில் ஆசிரியர்களுக்கு மற்ற துறையினை காட்டிலும் அதிக சம்பளம் தர பலக் கல்லூரிகள் தயாராக இருக்கின்றன. பெண்கள் இத்துறையினை படித்து வெளி வந்தால் டிசைன் மற்றும் கல்வி துறைகளில் சரியான எதிர்காலம் உண்டு. ஆண்களுக்கு சொல்லவே தேவை இல்லை.


அடுத்து நாம் பார்க்க போவது இயந்திரவியல் துறை. எனக்கு தெரிந்து அதிக கல்லூரிகளில் நன்கொடை வாங்குவது இந்த துறைக்குத்தான், படித்தால் இதில்தான் படிப்பேன் என்று பல மாணவர்கள் அடம்பிடிப்பதற்கு காரணம் MECHANICAL என்றாலே MASS தான், ஓரளவுக்கு படிப்பதற்கும் எளிதாக இருக்கும் என நம்புவதும் ஒரு காரணம். இதன் உப பிரிவுகளான TOOL & DIE மற்றும் AUTOMOBILE பிரிவுகள் இதற்கு ஈடாக வேலை வாய்ப்பை தருகிறது. இதிலும் DESIGN பிரிவு இருக்கிறது. பெரிய பெரிய வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு இத்துறையினில் படித்தவர்கள் நிறைய தேவை படுகிறார்கள்.


அடுத்து நாம் பார்க்க போவது மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறைகள் பற்றி. நன்கு படிக்கக் கூடிய மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் துறைகள் இவை, ஏனெனில் புரிந்து படித்தால் முழு மதிப்பெண்ணும் வேலை வாய்ப்பும் சர்வ நிச்சயம், அதுவுமில்லாமல் பெண்கள் அதிகம் விரும்பும் துறைகள் இவை. அதிலும் மின்னனுவியல் (ECE) படிப்பவர்கள் மின் துறை சம்பந்தமான நிறுவனங்களிலும் கணிப்பொறி சம்பந்தமான நிறுவனங்களிலும் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

 

கணிப்பொறியியல் துறையை பற்றி சொல்லவே வேண்டாம், 5 இலகர சம்பளம் ஆரம்பதிலேயே கிடைக்கும் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்தால். பெண்களுக்கு ஏற்ற பிரிவு, உட்கார்ந்து வேலை பார்க்கலாம். ஓரளவுக்கு எளிதான படிப்புதான். வெளி நாடுகளில் நல்ல வாய்ப்பு உண்டு.

பொறியியலில் எந்த பிரிவு எடுத்தாலும் அடிப்படையான ஆங்கில அறிவு கட்டாயம் தேவை, பெரும்பாலான மாணவர்கள் தமிழ் வழியில் படித்து விட்டு செல்பவர்கள் பொறியியலில் தடுமாற ஆங்கிலம் தான் காரணம். ஆங்கிலத்தை அறிவாக பார்க்காமல் மொழியாக மட்டும் பார்த்தால் எந்த பிரச்சனையும் வராது. பெற்றோர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றுதான். உங்கள் பிள்ளையை பொறியியல் சேர்த்துவதாக இருப்பின் உங்கள் வீட்டில் ஆங்கில செய்திதாள்களை வாங்க ஆரம்பியுங்கள். உங்கள் பிள்ளைகளை வாசித்து பழக சொல்லுங்கள்.

மறக்காமல் உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.


Comments

  1. விளக்கமாகச் சொல்லி உள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

    நன்றி...
    திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்

கலாய்ச்சுட்டாராமாம்...