கலக்கல் ஆவி- காமெடிப்படம் - GHOST TOWN- REVIEW

அன்பர்களுக்கு வணக்கம், அனைவராலும் ரசிக்க கூடிய படங்களுடைய முடிவு பெரும்பாலும் சுபமாகத்தான் இருக்கும், அனைவரது மனமும் மகிழ்ச்சியைத்தான் விரும்புகிறது. ஹாலிவுட்டிலும் அதனால்தானோ என்னவோ குறைந்த செலவில் எடுக்கப்படும் ROMANTIC COMEDY படங்கள் சக்கை போடு போடுகின்றன. அந்த வகையான் படங்களில் FANTASY கலந்திருந்தால் எப்படி இருக்கும்? அந்த மாதிரியான ஒரு படம்தான் "GHOST TOWN".


 கதையின் நாயகன் ஒரு பல் மருத்துவர், தனிமை விரும்பி, எந்த அளவுக்கு என்றால் யாராவது உதவி கேட்டால் கூட கழண்டுக் கொள்வார், எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார். இவரது அப்பார்ட்மென்ட்டில் தான் நாயகியும் வசிக்கிறார்.


ஒரு நாள் கிட்டத்தட்ட தற்கொலை முயற்சி போல் ஏதோ ஒன்று செய்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைக்கிறார்.  அடுத்தடுத்த நாட்களில் அவர் கண்களுக்கு இறந்தவர்கள் தெரிய ஆரம்பிக்கிறார்கள்.

அவர்களுக்கு இவரால் தங்களை பார்க்க முடியும் என்ற விசயம் தெரிய வந்ததும் ஒவ்வொருவரும் தங்களது கடைசி ஆசையை தீர்த்து வைக்க சொல்லி பின் தொடர்கிறார்கள். தனிமை விரும்பிக்கு ஒரு கூட்டமே பின் தொடர்ந்தால் எப்படி இருக்கும்?


அதில் ஒருவர் தனது மனைவி சம்பந்தமான பிரச்சனையை தீர்த்து வைத்தால் மற்ற ஆவிகளிடமிருந்து காப்பாற்றுவதாக சொல்லி டீல் பேசுகிறார், தப்பிக்க வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ளும் நாயகன் தனது பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ள துவங்குகிறார்.


கொஞ்சம் கொஞ்சமாக நாயகியுடன் நெருங்கி பழக துவங்குகிறார், நாயகிக்கு தனது பல அந்தரங்க விஷயங்கள் எப்படி இவருக்கு தெரிந்திருக்கிறது என்ற குழப்பம் வர நாயகன் உண்மையை ஒத்துக் கொள்கிறார். அதை நம்பாமல் நாயகி பிரிகிறாள்.

தனிமையில் தவிக்கும் நாயகனுக்கு "மற்றவர்களுக்கு உதவதுதான் வாழ்க்கை" என் உணர்த்துவது ஒரு இந்திய டாக்டர். படத்தில் நமது கலாச்சாரத்தை பெருமைப் படுத்துகிறார்கள். தன்னை பின் தொடரும் ஆவிகளின் ஆசைகளை நிறைவேற்றி அவர்களை வழியனுப்புகிறார்.


அவரது நல்ல உள்ளத்தை ஹீரோயின் புரிந்து கொள்கிறாரா? இடையில் ஒரு சமுக சேவகன் வந்து ஹீரோயினை கவர முயற்சிப்பது என்னாகிறது? திடிரென்று விபத்தில் சிக்கும் நாயகனின் நிலைமை என்னாகிறது என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ்.

படத்தில் FANTASY அடையாளம் 'ஆவிகளை நாம் தீண்டினால் தும்மல் வருகிறது, ஆவிகள் முக்தியடையும் போது பக்கத்தில் உள்ள விளக்கு பிரகாசமாக எரிகிறது'.

காதல், நகைச்சுவை, FANTASY மூன்றையும் சரியான விதத்தில் கலந்து எடுத்திருக்கிறார்கள், ஆவிகள் பற்றிய காட்சிகள் எடுத்த விதம் அருமை. சொல்ல வந்ததை சரியாக சொல்லி இருக்கிறார்கள். நகைச்சுவை பிரியர்களுக்கு படம் பிடிக்கும்.

படத்தின் ட்ரெய்லர்


மறக்காம கமெண்ட் போடுங்க, கீழே தமிழ்10, இண்ட்லிலாம் இருக்கு, ஒரு க்ளிக் பன்னி விடுங்க. நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க.


Comments

  1. நல்ல விமர்சனம்... நன்றி !

    ReplyDelete
  2. இதுவும் ஏற்கனவே கேள்விப்பட்ட படம் தான். இன்னும் பார்க்கவில்லை. நல்ல விமர்சனம்....நன்றி. :)

    ReplyDelete
  3. சிறப்பான விமர்சனம்! தமிழ் 10மட்டும்தான் இருக்கு இண்டிலி காணலியே!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

கலாய்ச்சுட்டாராமாம்...

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்