Posts

Showing posts from October, 2012

வீட்டில் சோலார் பயன்படுத்துவது குறித்த தகவல்கள்

Image
அன்பர்களுக்கு வணக்கம், மின்வெட்டிற்கு சரியான நிவாரணம் சோலார்தான் என்பதை வலியுறுத்தி ஏற்கனவே சில பதிவுகள் போட்டு இருக்கிறேன், இப்போது அரசும் இதை ஒப்புக் கொண்டு விட்ட நிலையில், இணையத்தில் மேய்கின்ற பொழுது நான் படித்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வீட்டிற்கு சோலார் செல் மூலம் மின்சாரம் அளிக்க எவ்வளவு செலவு ஆகும்? மானியம் எங்கே கிடைக்கும்? என்பது பற்றிய கேள்விகளை வலை நண்பர்கள் கேட்டிருக்கின்றார்கள். என் நண்பர் ஒருவர் மகாராஷ்டிரா, புனாவில் சோலார் செல் பிசினஸ் நடத்துகிறார். அவரிடமிருந்து கேட்டுப் பெற்ற தகவல்களை இங்கே கொடுக்கிறேன். வீட்டிற்கு : உங்கள் வீட்டில் ஒரு மாதத்திற்கு சுமார் 100லிருந்து 150 யூனிட் வரை மின்சரம் செலவானால், ஒரு கிலோவாட் சோலார் சிஸ்டம் போதுமானது. (மின்சார பில் பல இடங்களில் 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் வரும். அதனால், 2 மாதத்திற்கு 200லிருந்து 300 யூனிட் செலவு என்று சொல்லலாம்). இதற்கு 2 லட்சம் வரை செலவாகும். உங்கள் கையிலிருந்து 1.1 லட்சம் செலவாகும். மீதி 90 ஆயிரம் ரூபாய் மானியமாகக் கிடைக்கும். உங்களுக்கு சோலார் சிஸ்டம் சப்ளை செய்யும் நிறுவன

தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்

Image
தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்று  மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.      மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சைமாவட்டம்), வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 9

நுகர்வோர்க்கான ஒரு விழிப்புணர்வு பார்வை !

Image
காசு கொடுத்துதானே பொருள் வாங்கிறோம் ….? நுகர்வோர்க்கான ஒரு விழிப்புணர்வு பார்வை ! அன்றாட வாழ்க்கையின் அவசரத்தில் நுகர்வோராய் இருக்கும் நாம் வியாபாரிகளை பல்வேறு காரணங்களுக்காக குற்றம் சொல்வோம் ஆனால் நுகர்வோரின் கடமைகள் என்ன? என்று நமக்குத் தெரியுமா? இது பற்றிய ஒரு விழிப்புணர்வு பார்வை இதோ… முக்கியப் பேருந்து நிலையங்கள் போன்ற, அவசரகதியாக மக்கள் கூடும் இடங்களில் அமைந்திருக்கும் கடைகளில் சென்று பொரு ட்களை வாங்கும் போது பார்த்தால், பெரும்பாலும் இரண்டு மூன்று ரூபாய் அதிகம் விலை வைத்தே விற்பனை செய்கிறார்கள். என்னது இது? எம்.ஆர்.பி இவ்வளவு தானே, ஏன் அதிகமான விலைக்கு இந்த பொருட்களை விற்கிறீர்கள் என்று கேட்டு விட முடியாது. அப்படிக் கேட்பின் சுற்றி நிற்பவர்களும், கடைக்காரரும் நம்மைப் பார்க்கும் பார்வை இருக்கிறதே… கொடுமை. அத்தனை ஏளனம் இருக்கும். நாம் வாங்குகின்ற பொருளுக்கு காசு குடுக்கின்ற நாம் எஜமானர்கள் கிடையாது. இது தான் நடப்பில் உள்ள நிதர்சனமான உண்மை. சரி, அதட்டித்தான் கேட்க வேண்டாம், “என்ன சார் இது? இப்டிப் பண்றீங்களே” என நியாயமான முறையில் கேட்டாலும் கூட… அதான் எல்ல

SALT n PEPPER மலையாளம் திரைவிமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், வரவர நண்பர்கள் கேலி செய்யும் அளவிற்கு மலையாள படங்களை பார்க்க துவங்கி விட்டேன், எப்போதும் தமிழனுக்கு தமிழ் பெண்களை விட மலையாளப் பெண்களைத்தான் அதிகம் பிடிக்கும், மறுக்கும் ஆண்கள் மறக்காமல் பின்னூட்டமிடவும், " 22 FEMALE KOTTAYAM " படத்திற்கு அந்த இயக்குனரின் படமான "SALT N PEPPER" படத்தினை மிகவும் விரும்பி தரவிறக்கம் செய்து பார்த்தேன்.   ஜாக்கி அண்ணன் எனக்கு முந்தி கொண்டார், அவர் எழுதிய இப்படத்தின் விமர்சனத்தில் பாலகுமாரனின் "ருசியை அறு" வாக்கியத்தினை மேற்கோள் காட்டி இருப்பார், நான் பாலகுமாரனின் தீவிர விசிறி, என் நடவடிக்கைகளில் பலவற்றினை மாற்றியது பாலகுமாரனின் எழுத்துக்கள் தான், ஆனால் என்னால் இன்னமும் ருசியை அறுக்க முடியவில்லை, இப்படத்தின் மென்மையான ஆழமான காதல் சொல்லப் பட்டுள்ளது. படத்தில் கதை நாயகன் நமது சண்டைக்கோழி வில்லன் "லால்" அகழ்வாராய்ச்சி துறையில் வேலை பார்ப்பவர், பெண் பார்க்கும் இடத்தில் பலகாரத்தினை ருசித்து சாப்பிட்டு சமையல்காரனை கையோடு கூட்டி வருபவர், பட ஆரம்பத்தில் சிறுவயது பள்ளியில் ஆசிரியர் உணவு சங்க

ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு

Image
ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு... -எல்.முருகராஜ் மதிய உணவு வேளை ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடு, அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஏவிஎம் உணவு விடுதி அருகில், காலில் செருப்பு கூட இல்லாதவர்கள், உடம்பில் சட்டை போடாமல் துண்டு மட்டும் கொண்டு இருப்பவர்கள், ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்த வேட்டியை அணிந்தவர்கள், நைந்து போன புடவையுடன் காணப்பட்டவர்கள் என சுமார் இருபது பேர் அந்த உணவு விடுதி அருகே, கண்களில் கவலையையும், கையில் ஒரு பையையும் வைத்துக்கொண்டு நின்றார்கள். சிறிது நேரத்தில் உணவு விடுதியில் இருந்து அழைப்பு வந்ததும் கையில் இருந்த ஒரு டோக்கனையும், ஒரு ரூபாயையும் கொடுத்துவிட்டு ஒரு பார்சல் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு திரும்பினர். பார்த்த நமக்கு ஆச்சர்யம், இந்த காலத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடா என்று! உள்ளே வாங்க விவரமா சொல்றேன் என்று மெஸ் உரிமையாளர் வெங்கட்ராமன் அழைத்துச் சென்றார், முதல்ல சாப்பிடுங்க என்று சூடான சாப்பாடை சாம்பார், ரசம், மோர் கூட்டு பொரியல், அப்பளத்துடன் வழங்கினார் சுவையாகவும், திருப்தியாகவும் இருந்தது. நீங்க சாப்பிட்ட சாப்பாட்டின் விலை இருபத்தைந்து ரூபாய், இந்த சா

சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு

Image
மறைக்கப் பட்ட வரலாற்று உண்மை ! இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் ? இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று !!! இந்தியாவிற்கு சுதந்திரம் அடைய காரணமானவர் மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் தான் .   அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை திட்டமிட்டு மறைக்க பட்டுவிட்டது . இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யாரோ ? அந்த பேரையும் புகழையும் அனுபவிப்பது யாரோ ? சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு . சுருக்கமாக : அகிம்சை முறையில் போராடி கொண்டு இருந்த காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார் . அகிம்சை முறையில் போராடினால் பல ஆண்டுகளாக இந்த போராட்டம் இழுத்து கொண்டே போகும் . கோடிகணக்கான இந்தியர்களை வெறும் இருபதாயிரம் வெள்ளையனைக் கொண்ட ராணுவம் அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது . ஏன் அந்த ராணுவத்தை அடித்து விரட்ட கூடாது . அவர்களை நான் ஆயுத ரீதியாக எதிர்கொள்ள திட்ட மிட்டு இருக்கிறேன் . உங்களின் கருத்து என்ன என்று காந்தியிடம் கேட்ட போது அகிம்சையை போதிக்கும் நான் இதை ஒருநாளும் ஏற்று கொள்ள மாட்டேன் என்று சொன்னார் . இருவருக்கும் நிறைய கருத்து மோ

களத்து மேட்டிலும் கரன்ட் உற்பத்தி செய்யலாம் ...!

Image
மாற்றுசக்தி! ஒரு புரட்சி!   'கரன்ட் இல்லை... கரன்ட் இல்லை...’ என்கிற குரல் ஒலிக்காத இடமே இல்லை. மாவு மில் தொடங்கி... 'மோட்டார் தயாரிப்பு நிறுவனங்கள்’ வரை பவர் கட் பாதிப்பு, படுத்தி எடுப்பதன் விளைவு சொல்லி மாளாது. விவசாயமும் இதற்கு விதிவிலக்கல்ல. கருகும் பயிர்களைக் காப்பாற்ற இரவுபகலாக மின்சாரத்துக்காக காத்துக்கொண்டு... 'இதற்கான மாற்றுவழியே இல்லையா...?’ என ஏங்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு, நம்பிக்கைக் கீற்றாக ஜொலிக்கிறது, 'சோலார் பவர்’ என்ற சூரியசக்தி மின்சாரம். ''ஆம்... இது ஒன்றுதான் எதிர்காலத்தில் நம்மைக் காப்பாற்றப் போகிறது. இதுதான் உண்மை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்'' என்று நம்பிக்கையோடு பேசுகிறார்... இந்த சூரியசக்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீர் இறைத்துப் பாசனம் செய்துகொண்டிருக்கும் கோயம்புத்தூர் மாவட்டம், முருகன்பதி கிராமத்தைச் சேர்ந்த ஆர். விஜயகுமார். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தின் குளிர்காற்று சிலுசிலுக்க, தோட்ட எல்லையில் ரயில்கள் தடதடக்க, தென்னை மரங்கள் குடை பிடித்துக்கொண்டிருக்க, ரம்மியமாக இருக்கிறது விஜய

ROCKET SINGH - SALESMAN OF THE YEAR திரை விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம்,என்னவோ சோம்பல் போட்டு வாட்டுவதாலும் இடைவிடாத மின்வெட்டினாலயும் பதிவு எழுதும் எண்ணமே வருவதில்லை, விதவிதமாய் எழுதும் எண்ணங்கள் மனதில் இருந்தாலும் திரைவிமர்சனம் மட்டுமே நினைத்ததும் எழுதக் கூடியதாய் இருக்கிறது. இன்று நாம் பார்க்க இருக்கும் படம் "ROCKET SINGH - SALESMAN OF THE YEAR". இப்படத்தினை பற்றி கேள்விப் பட்டு இருப்பினும் நாயகன் ரன்பீர் கபூருக்காகத்தான் பார்க்க துவங்கினேன், ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்துகிறார் மனிதர், இவருடைய படமான ' BACHNA AE HASEENO 'க்கு ஏற்கனவே விமர்சனம் எழுதி இருக்கிறேன். இவருடைய தற்போதைய வெற்றிப் படமான BARFI பற்றி கேள்விப் பட்டு இருப்பீர்கள். சரி கதைக்கு வருவோம். படத்தின் பெயரிலேயே நாயகன் ஒரு சிங் என்பது தெரிந்திருக்கும், அபியும் நானும் படம் பார்த்த பின் தான் எனக்கு அந்த சமுதாயத்தின் பெருமை புரிந்தது. தாத்தாவால் வளர்க்கப்பட்டு கல்லூரியில் ரசனையாக பேசி திரிந்து சரியாக பாஸ் மட்டும் ஆகி வெளிவரும் நாயகனுக்கு SALESMAN ஆக வேண்டும் என்பது விருப்பம், அதுதான் தனக்கு பொருத்தமாக இருக்கு

தியாகச்சுடர் காமராசர் - அக்டோபர் 2 .

Image
காமராசர் இறந்தபோது அவர் வீட்டில் (சென்னையில்) இருந்த மொத்த பணம் வெறும் 67 ரூபாய் மட்டுமே. காமராசர் பல வங்கிகளில் பணம் போட்டு வைத்திருக்கிறார் என்று பலர் மேடைகளில் பேசியதுண்டு, எழுதிய துண்டு. அது பொய் என்று நிரூபித்தது இந்த 67 ரூபாய். ஒருமுறை முதல்-அமைச்சர் காமராசர் ரெயிலில் பகல் வேளையில் திருநெல்வேலிக்குப் பயணமானார். விருதுநகர் ரெயில் நிலையத்தில் வண்டி நின்றபோது நிறைய பிரமுகர்கள் காமராசரை சந்தித்தனர். காமராசரோ வண்டியில் இருந்து இறங்கவே இல்லை. ரயில் பெட்டியின் வாசலில் நின்று அவர்களின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். வண்டி நகரும் முன் ஒரு தொண்டர் காமராசரிடம் ஐயா அதோ அம்மா நிக்காங்க என்று காட்ட காமராசர் ஏறிட்டுப் பார்த்தார். கூட்டத்துக்கு அப்பால் அவரது தாயார் நின்று கொண்டு மகனைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார். வண்டி நகரத் தொடங்கியது காமராசர் ரெயில் பெட்டியின் வாசலில் நின்று கொண்டிருந்தார். பெட்டியின் வாசல் அவரது தாயாருக்கு நேர் எதிரே வந்த போது, “சௌக்கியமா அம்மா'’ என்று காமராசர் கேட்டார். தாயாரின் முகம் மேலும் மலர்ந்தது. வண்டி மேலும் நகர்ந்தது. தனது தாயார் த