Posts

Showing posts from December, 2012

விவசாயி கோடிசுவரரான கதை!

Image
ஒரு சாமானிய விவசாயி மரம் தங்கசாமி கோடிசுவரரான வெற்றிக் கதை! உங்களை ஒரு மா மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, “இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது? அதற்குள் நம் காலமே முடிந்துவிடும்” என்றுதான் போகும். ஆனால், தனக்கு மாம்பழம் கிடைக்குமா என எதிர்பார்க்காமல், தொடர்ந்து மா மர ங்களை நடுபவர்களால்தான் இந்த உலகம் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பது காலம் உணர்த்தும் உண்மை. அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுள் ஒருவர், மரம் தங்கசாமி! தனது பெயருடன் மரத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கும் தங்கசாமி, காடு வளர்ப்பில் உலகுக்கே இன்று ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். உலகின் பல பகுதிகளில் இருந்தும் வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தங்கசாமியின் தோட்டத்துக்கு வந்து பார்வையிடுகிறார்கள். தனி மனிதனாக அவர் செய்திருக்கும் சாதனைகள் பற்றி புத்தகம் எழுதுகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் - விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், ரொம்ப நாள் கழித்து உண்மையிலேயே வயிறு வலிக்க சிரித்து விட்டு வந்திருக்கிறேன், படத்தின் ஒளிப்பதிவாளரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தினை கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும் இப்படத்தினை பற்றி பார்ப்போம். முதலில் நாயகன் விஜய் சேதுபதிக்கு எனது வாழ்த்துக்கள், புதுசா வர்ர எல்லாருக்கும் இப்படி வித்தியாசமான கதைகள் அமையாது, இவரோட தென்மேற்கு பருவகாற்று, பீஸா, இப்ப ந.கொ.ப.கா மூனுமே வெவ்வேற கதைக்களம், புதுமுக இயக்குனர்கள், ஆனா நெஞ்சை தொடற கதை.   கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் பீஸால பயமுறுத்தி இருந்தார். படத்தோட ட்ரெய்லர் அ பார்த்துட்டும் வெள்ளிக்கிழமை சகப்பதிவர்கள விமர்சனத்தை பார்த்துட்டும் நேத்து போய் தியேட்டர்ல படம் பார்த்தேன். செம, கலக்கிட்டாங்க. மிடில் க்ளாஸ் ஹீரோ, 2 ஸ்கூல் ஃப்ரென்ட்ஸ், 1 ஆபிஸ் ஃப்ரெண்ட் கல்யாணத்துக்கு 2 நாள் முன்னாடி கிரிக்கெட் விளையாண்டு பால் அ மிஸ் பண்ணி கீழே விழுந்து மண்டைல அடிபட்டு சுமார் 1 வருசமா நடந்ததை முழுக்க மறக்கற ஹீரோவ ஆஸ்பிடல் கூட்டி போக ஆரம்பிக்கறப்ப படம் பயங்கர சூடு பிடிக்குது. தூங்கி எழுந்தா எல்லாம் ஞாபகத்துக்கு வந்த