Posts

Showing posts from March, 2012

பிரபல நடிகை- அனுஷ்கா கார் விபத்தில் படுகாயம்,

Image
அன்பு நண்பர்களே ஒரு சோகமான செய்தி, "அருந்ததி" பட புகழ் அனுஷ்கா இன்று காலை ஹைதாராபாத்தில் சூட்டிங் முடிந்து ஏர்போர்ட்டுக்கு செல்லும் வழியில் கார் விபத்தில், கார் கவிழ்ந்து படு காயமடைந்தார், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டாலும் தலையில் பலத்த அடிபட்டிருக்கும் காரணத்தால் இன்னமும் அவசர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப் பட்டிருக்கிறார். அனுஷ்காவிற்கு வயது 30 ஐ தாண்டினாலும் இன்னமும் திருமணமாகதவர் என்பதும், தமிழ் மற்றும் தெலுங்கில் எண்ணற்ற ரசிகர்களை உடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நண்பர்களே சொல்வதற்கு வருத்தமாகா இருந்தாலும் அனைவருக்கும் முட்டாள் தின வாழ்த்துக்கள். ஹா ஹா ஹா.ஆயிரந்தாம் இருந்தாலும் அனுஷ்காக்கு ஒன்னுன்னா மனசு கேட்க மாட்டேங்குதுல்ல. கோபப்படாமல் உங்கள் கருத்துக்களை பின்னுட்டமிடுங்கள்.

234 எம் எல் ஏக்களும் இனிமே ஒரு கிளிக்கில் உங்களுக்கு...!!

Image
ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் உங்கள் " நியாமான " கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம். பதில் வருமா வராதான்னு எனக்கு தெரியாது, என்னை கேட்டால் எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது அதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம். 234 தொகுதி எம் எல் ஏக்கு தனி தனியே கொடுக்கபட்டுள்ளது, வழக்கம் போல பகிரவும்... 1 Acharapakkam - mlaacharapakkam@tn. gov .in 2 Alandur - mlaalandur@tn.gov.in 3 Alangudi - mlaalangudi@tn.gov.in 4 Alangulam - mlaalangulam@tn.gov.in 5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in 6 Anaicut -- mlaanaicut@tn.gov.in 7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in 8 Andimadam --- mlaandimadam@tn.gov.in 9 Andipatti----mlaandipatti@tn.gov.in 10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in 11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in 12 Arantangi-- mlaarantangi@tn.gov.in 13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in 14 Arcot --- mlaarcot@t

ஜெயலலிதாக்களும், கருணாநிதிகளும் நாசமாய்ப் போகட்டும்

Image
நாளை முதல் மின்சாரக்கட்டணம் மிகக் கடுமையாக உயர இருக்கிறது. ‘புதிய தலைமுறை’ டிவி வாசித்த கட்டண உயர்வு செய்திகளைக் கேட்டவர்கள் அதிர்ந்துபோய் இருக்கிறார்கள். வாழ்க்கையையே  பெரும் சுமையாகிப் போக வைத்த பெருமை ‘அன்புச் சகோதரி’ ஜெயலலிதாவுக்கே இப்போது சேரும். ‘தான்  ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் மின்வெட்டை சரிசெய்வதாகவும், கருணாநிதி ஆட்சியின் அலங்கோலங்களைச் சரி செய்வதாகவும்’ இரட்டை விரல் காட்டி காட்டி ஓட்டு கேட்டார் ஜெயலலிதா. பதவிக்கு வந்தவுடன், கருணாநிதியின் பொறுப்பற்ற ஆட்சியைக் காரணம் காட்டி, பஸ்கட்டணம், பால் கட்டணம் எல்லாவற்றையும் அதிரடியாக அறிவித்தார். இதற்குப் பிறகும் என்னை சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் தோற்கடித்துப் பாருங்கள் என சவால் விட்டார். அமைச்சர் பெருமக்கள் எல்லாம் அங்கே முகாமிட்டு, கொடுக்க வேண்டியதைன் கொடுத்து, பெற வேண்டியதைப் பெற்றதும், மமதையில் கொக்கரித்தார் ஜெயலலிதா. அங்கே தோற்றவர்கள் கருணாநிதியல்ல, வை.கோ அல்ல, விஜய்காந்த்தும்  அல்ல. மக்களே.  கூடவே இந்த விளங்காத ஜனநாயகமும்தான். அந்தக் கொழுப்பில்தான் இப்போது மின்சாரக் கட்டண உயர்வு அறிவிக்கப்படுகிற

மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் எப்படிப்பட்டவர் ?

Image
  இவரைப் பத்தி நிச்சயம் தெரிஞ்சுக்கோங்க ! மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் எப்படிப்பட் டவர் ? ‘‘மதுரை கலெக்டர் சகாயம், அதிமுக-வினர் போல் செயல்படுகிறார். அவர் தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று பேசும் அளவிற்கு சென்றுள்ளார் என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.’’ மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை மாவட்ட ஆட்சியர் குறித்து அளித்துள்ள பத்திரிகை செய்தி இது. இதே சகாயம் குறித்து டெக்கான் கிரானிக்கில் மற்றும் ஆனந்த விகடன் ஆகிய இதழ்கள் அளித்துள்ள விவரங்கள் என்ன? ‘‘என்னை கோயம்புத்தூருக்கு மாற்றியிருந்த நேரம். என் பெண் யாழினிக்கு அப்போது மூன்று வயது. திடீரென்று ஒருநாளிரவு அவள் மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டாள். மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றேன். உடனே மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லிவிட்டார்கள். மாதக் கடைசி என்பதால் கையில் ஆயிரம் ரூபாய் கூட இல்லை. புதிய ஊர். அறிமுகம் இல்லாத மனிதர்கள். எனக்குக் கீழே வேலை பார்க்கிறவர்களிடம் கடன் கேட்கவும் சங்கடமாக இருந்தது. காஞ்சிபுரத்தில் நான் வேலை பார்த்தபோது எனக்கு நண்பராக இருந்த ஒரு பள்ளி ஆசிரியர் அப்போது கோவைக்கு மாற்றல் ஆகி வந்திருந்தார்.

காதலில் ஏமாந்தவர்களுக்கான படம்- Forgetting.Sarah.Marshall- திரை விமர்சனம்

Image
அன்பு வாசகர்களுக்கு,  கடந்த 2 நாட்களாக எந்த பதிவும் போடாமல் என் வளைத்தளம் காற்று வாங்கி கொண்டிருப்பதை பொறுக்காமல் இதோ ஒரு ஹாலிவுட் பட விமர்சனம். Forgetting.Sarah.Marshall- இது போல் ஒரு படம் தமிழிலும் வர வேண்டும், கதைக்கரு தலைப்பிலேயே தெரியும். தன்னை திடிரென்று விட்டு விட்டு போன காதலியை மறக்க காதலன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதுதான் கதை.   பீட்டர், ஒரு மியுசிசன், "scene of crime" என்னும் நிகழ்ச்சிக்கு இசையமைப்பவன், அதே நிகழ்ச்சியின் கதாநாயகி சாரா, இருவரும் 5 வருடங்கள் ஒன்றாக இருப்பவர்கள், படத்தின் ஆரம்பத்திலேயே சாரா, தான் வேறோருத்தனை விரும்புவதாக கூறி விட்டு பிரிந்து செல்கிறார். அப்புறமென்ன? ஹீரோ தேவதாஸ் ஆகி என்ன செய்வது எப்படி மறப்பது என்று தெரியாமல் வீட்டிலேயே அடைந்து கிடக்க ஹீரோவின் தம்பி வந்து அட்வைஸ் பன்னி, மற்ற பெண்களிடம் ரூம் போட்டு குடுக்க, அந்த  ஐடியாவும் வொர்கவுட் ஆகாம சொதப்ப, பேசாமல் ஏதாவது டூரிஸ்ட் ஸ்பாட்டுக்கு போக சொல்ல, பீட்டர் சாராவுக்கு பிடித்த ஹவாய் தீவை தேர்ந்துடுத்து அங்கு செல்கிறார். அழகான இடம், கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா

மின்சார பிரச்சனைக்கு புதிய தீர்வு- தமிழனின் புதிய கண்டுபிடிப்பு

Image
கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தி

திரைப்பட மோகத்தில் சிக்கி சீரழியும் தமிழர்களே?????

Image
இந்த ஆபாச படங்கள் தேவையா ? என்ற வினா எழுப்புவோர கண்டிப்பாக கட்டுரையை படியுங்கள் உலகின் ஆளுமை மிக்க துறை மூன்று ௧)அரசியல் துறை ௨) திரைப்படத் துறை ௩) தொழில் துறை . இம் மூன்றையும் இன்று, மாற்று இனத்தவர் கள் கைப்பற்றிக் கொண்டு தமிழர்களை அடிமைகளாக நடத்து கிறார்கள் தமிழர்களை இழிவு படுத்துகிறார்கள் இதில் திரை பட துறை, தமிழர்களை முற்றிலுமாக முடக்குகிறது . வந்தேறிகளின் கூடாரமாக தமிழர் நாடு மாறி விட்டது . . இன்று உள்ள ஊடகங்கள்,அழகு என்ற சொல்லுக்கு மாறுபட்ட பொருளை உருவாக்கி, தமிழர்களை உளவியல் ரீதியாக மட்டுபடுத்தும் வேலை யை செய்கின்றன.திரைப்படம் மற்றும் தொலை காட்சி ஊடங்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன . சில பத்து ஆண்டுகள் முன்பு வரை கருப்பாக, மாநிறமாக, கலையாக இருப்பவர்கள் தான் அழகானவர்கள் என்ற நிலை தமிழர்கள் இடையே இருந்து வந்தது . தமிழ் திரைப்படங்களில் கருப்பு, மாநிறம் என்று சொல்லக் கூடியவர் களே கதா நாயகன் ,நாயகியாக வலம் வந்தார் கள்.அந்த திரைப் படங்களை பார்க்கும் தமிழ் பெண்களுக்கு, இளைஞர் களுக்கு தங்களை ஒத்தவர்கள் என்பதால் தன்னம்பிக்கை கூடிற்று.கருப்பாக இருப்பவர்

KAHAANI - பார்க்க வேண்டிய படம்- திரை விமர்சனம்

Image
அன்புள்ள வாசகர்களுக்கு, இது வரை நான் ஒரு தமிழ் படத்திற்கு கூட விமர்சனம் எழுதியது இல்லை, ஏனென்றால் தமில் சினிமாக்களை நான் பார்ப்பதற்குள் குறைந்தது 50 பேராவது பார்த்து விமர்சனம் எழுதி விடுகிறார்கள், மற்ற மொழி படங்கள் அப்படி இல்லை, அதனால்தான் நான் எழுதும் விமர்சனங்கள் மற்ற மொழி படங்களை மட்டும் விமர்சிக்கின்றன. இன்று நாம் பார்க்க இருக்கும் படம் "KAHAANI". இந்த வார்த்தைக்கு அர்த்தம் எனக்கு தெரியவில்லை. தலைப்பா முக்கியம், நம்மள பொறுத்த வரைக்கும் வசனமே முக்கியம் இல்லை.  அதாவது பார்த்திங்கனா நம்ம வித்யா பாலன் அதாங்க நம்ம ஊர் சில்க் ஸ்மிதா கேரக்டர்ல THE DIRTY PICTURE ல நடிச்சதே அந்த பொன்னுதான், உண்மைலேயே அழகான பொன்னுங்க, அதே நேரத்துல நல்லா நடிக்கவும் செய்யுது.கதைக்கு வருவோம். படத்தோட ஆரம்பத்துல ஒரு மெட்ரோ ட்ரேய்ன் ல ஒரு டெர்ரரிஸ்ட் கேஸ் பாம் போட்டு எல்லாரையும் கொல்றத காட்றாங்க, இந்த சீன்னுக்கும் க்ளைமாக்ஸ்க்கும் சம்பந்தம் இருக்கு, நல்லா பார்த்துக்கங்க, ஒரு பொன்னு உண்மைலேயே கர்ப்பத்துலதான் அழகா தெரிவாங்கனு சொல்லுவாங்க, அந்த வகையில படம் ஆரம்பத்துல வித்யா ஏர்போர்ட்ல வந்து இறங்கும் போதே

இதுதான் காதல்-இறந்து போன காதலனை மணக்க காதலி முடிவு

Image
துப்பாக்கி சண்டையில் மரணம் அடைந்த வீரரை, அவரது கர்ப்பிணி காதலி திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளது பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் கடந்த வாரம் முகமது மீரா(வயது 23) என்ற தீவிரவாதி பள்ளிக்கூடத்திலும், அதற்கு அருகில் உள்ள இடங்களிலும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். இதில் துணை இராணுவ வீரர் அபெல் சென்னூப், 3 பள்ளி குழந்தைகள், ஆசிரியை உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். இதன் பின்னர் அவரது வீட்டில் பதுங்கியிருந்த முகமதுவை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் வக்கீல் கில்பர்ட் கொலார்ட் என்பவர் கூறியதாவது: துப்பாக்கிச் சூட்டில் இறந்த வீரர் அபெல் சென்னூப்பின் 21 வயது காதலி கரோலின் மோனெட். தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். இறந்த தனது காதலனை சட்டப்படி திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். இறந்த ஒருவருடன் திருமணம் செய்து கொள்வது வழக்கத்தில் இல்லாதது. ஆனால் சில அசாதாரண சூழ்நிலையில் இதுபோன்ற திருமணத்துக்கு அனுமதி அளிப்பது ஜனாதிபதியின் முடிவை பொறுத்தது. இதற்கு முன் இறந்த காவல்துறையினர் இருவரின் பேரின் காதலிகளுக்கு இதுபோல்

ரொம்ப பார்க்காதிங்க- முழுசா முடியாம போய்டுமாம்

Image
ஆபாசப் படங்களைப் பார்ப்போரால் படுக்கை அறையில் சிறப்பாக செயல்பட முடியாதாம். ஒரு ஆய்வு இப்படி எச்சரிக்கிறது. ஆண்கள்தான் பெருமளவில் ஆபாசப் படங்களை அதிகம் பார்க்கின்றனர். பெண்களிலும் ஆபாசப் படம் பார்ப்போர் உண்டு. அவர்களின் எண்ணிக்கை குறைவுதான். இப்படி ஆபாசப் படம் பார்க்கும், குறிப்பாக இன்டர்நெட்டில் ஆபாசப் படங்களை அடிக்கடி பார்ப்போரால், படுக்கை அறையில் நிஜமான செக்ஸ் நடவடிக்கையில் முழுமையாக செயல்பட முடியாமல் போகிறதாம். செக்ஸ் விஷயங்களை வீடியோவில் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டும் நபர்களால் உண்மையில், நிஜமான செக்ஸ் விஷயங்களை முழுமையாக, சரியாக நிறைவேற்ற முடியாமல் போய் விடுகிறதாம். இதனால் பல பிரச்சினைகளுக்கு அவர்கள் ஆளாவதாக இந்த ஆய்வுகூறுகிறது. வீடியோவில் செக்ஸ் உறவுகளைப் பார்ப்பதில் இருக்கும் ஆர்வத்தில் பாதியளவு கூட ஆண்களால் படுக்கை அறையில் காட்ட முடிவதில்லையாம். இதற்கு முக்கியக் காரணம், மூளையின் உற்சாக மையத்தை தூண்டி விடக் கூடிய ஹார்மோனான, டோபமைன் அபரிமிதமான அளவில் சுரப்பதே. அடிக்கடி ஆபாசப் படங்களைப் பார்த்து உணர்ச்சிவசப்படுவோருக்கு டோபமைன் அதிக அளவில் சுரந்து, சுரந்து க

தி புரோபசல்-சத்தமில்லாமல் பூக்கும் காதல்- திரை விமர்சனம்

Image
அன்பு வாசகர்களே, நாளுக்கு நாள் எழுதுவதில் கொஞ்சமாவது கற்றுக் கொள்கிறேன் என்ற நம்பிக்கையுடன் இதோ நான் ரசித்த திரைப்படத்தினை பற்றிய விமர்சனம்.... விக்கிபிடியாவில் ரொமன்டிக் காமெடி ஃபிலிம் வரிசையில் சில படங்களை தேர்வு செய்து பார்த்துக் கொண்டிருக்கிறேன், இப்போதெல்லாம் ஆக்ஸன் படங்கள் என்னை ஈர்ப்பதில்லை.அந்த வகையில் சமிபத்தில் நான் ரசித்த படம் "தி புரோபசல்" நாம் அனைவரும் வேலை பார்க்கும் இடத்தில் கண்டிப்பாக ஹிட்லர் என்று ஒருவருக்கு பெயர் வைத்திருப்போம். எல்லா அலுவலகங்களிலும் ஸ்ட்ரிக்டாக ஒருவர் இருப்பார்,அப்படி எல்லாராலும் "POISONOUS WITCH" என்று அழைக்க படுபவர்தான் ஹீரோயின் மார்க்கரேட்(சேன்ட்ரா பல்லாக்), அவருக்கு P.A வாக இருப்பவர்தான் ஹீரோ ஆண்ட்ரூ(ரியான் ரெனால்ட்ஸ்). படத்தின் ஆரம்பத்தில் மார்க்கரெட் எவ்வளவு கல் நெஞ்சக்காரி என்பதை ஒருவரை வேலையை விட்டு அனுப்பவதில் நமக்கு புரிய வைக்கிறார்கள், மார்க்கரேட்டுக்கு வீசா காலம் முடிவடைவதால் அவரை அரசாங்கம் திரும்ப கனடாவிற்கே போக சொல்கிறது. நம்ம ஊர் 'நள தமயந்தி' ஸ்டைலில் ஆண்ட்ரு வை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்த