Posts

Showing posts from June, 2012

சோனா கல்லூரிக்கு வந்த கெட்ட காலம்- காலேஜ் டைரி பாகம் 1

Image
அன்பர்களுக்கு வணக்கம், ஏதேதோ தோன்றுவதை எழுதிக் கொண்டிருந்தேன், பின்பு மற்றவர்களை பார்த்து விமர்சனம் எழுத துவங்கினேன். விமர்சனம் எழுதினால் அந்தந்த காலங்களில் மட்டுமே வாசகர்கள் கிடைப்பார்கள். எல்லா சமயங்களிலும் அனைவராலும் படிக்க விரும்பகூடிய பதிவுகள் எழுத முயற்சி செய்கிறேன். இதோ முதல் முயற்சி என் கல்லூரி அனுபவங்கள் என் நடையில் உங்களுக்காக. இந்த பதிவில் என் சுயபுராணம் அதிகம் வராமல் நிகழ்வுகளையே ரசிக்கும் விதத்தில் சொல்ல விரும்புகிறேன். எங்கயாவது என் பெருமைய பெருசா பேசுனா உடனே கமெண்ட் போட்டு என்னை ஆஃப் பன்னிருங்க. கதை எங்க இருந்து ஆரம்பிக்குதுனா எனக்கு SSLC ரிசல்ட் வந்த நாள்ள இருந்து, ஏன்னா தெரியாத்தனமா எனக்கு யாரோ 400 க்கு மேல மார்க் போடவும் என்னை கொண்டு போய் அந்தியுர் ஐடியல் ஸ்கூல்ல சேர்த்துனாங்க, நான் படிக்கறப்ப என் கூட படிச்ச எல்லாருக்கும் ஒரே ஒரு லட்சியம் தான். டாக்டராகனும்னு, அஃப்கோர்ஸ், எனக்கும்தான். ஆனா +2 பரிட்சை நெருங்கறப்ப எனக்கு தெரிஞ்சு போச்சு, நமக்கு எந்த மெடிக்கல் காலேஜ்லயும் சீட் தர மாட்டாங்கனு.  நம்ம ஊர்ல படிப்புனா 2 தான், ஒன்னு டாக்டர், இன்னோன்னு இஞ்சினியர்.

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- இறுதி பதிவு

Image
அன்பர்களுக்கு வணக்கம், இத்துடன் இந்த பதிவுத் தொடர் முடிவடைகிறது. ஏதோ ஒரு நாள் கோபத்தில் யாரையாவது திட்ட வேண்டும் போல் இருந்த பொழுது எழுத ஆரம்பித்தேன். முதல் பதிவு தலைப்புக்கென்றே நிறைய ரசிகர்களை பெற்றது. அதன் தாக்கமே அடுத்த பதிவிற்கும் நிறைய ஓட்டு கிடைத்தது. ஒரு கட்டத்தில் கோபமே இல்லாத நேரத்தில் ஏதோ எழுதுகிறோம் என்ற தலைக்கணத்தில் எழுதிய மூன்றாம் பதிவு யாராலும் ரசிக்கக் கூடியதாய் முடிந்து விட்டது. இந்த நிலையில் இத்தொடரினை முடித்துக் கொள்வதே கெளரவம். இந்த பதிவில் நான் யாரையும் திட்ட்ப் போவதில்லை. தலைப்பிற்கான காரணத்தை மட்டுமே எழுத போகிறேன். என்னை சுற்றிலும் ஏராளமான அல்டாப் ஆண்ட்டிகள், அவர்களை பற்றி முதல் மூன்று பதிவில் நிறைய எழுதி விட்டேன். படிக்காதவர்கள் படித்து விட்டு தொடருங்கள். இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- முதல் பாகம் இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- இரண்டாம் பதிவு இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- மூன்றாம் பதிவு ஒவ்வொருவரின் செய்கையும் என்னை மிகவும் எரிச்சலடைய செய்யும். ஏதாவது வேலையாக இருக்கும் பொழுது இவர்களது மினுக்கல்களை பார்த்

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- கடுப்பு பாகம் 3

Image
அன்பர்களுக்கு வணக்கம், உங்களுக்குனு வாழ்க்கைல ஆயிரம் பிரச்சனை இருக்கும் போதும் என் புலம்பலை முழுசா கேட்டதோட இல்லாம அதுக்கு கமெண்ட் போட்டு உற்சாகப்படுத்தற உங்களுக்கு ஒரு நன்றிய சொல்லிக்கறேன். இந்த பதிவோட முதல் 2 பாகங்களை படிக்காதவங்க முதல்ல அதை படிச்சுட்டு வந்துருங்க. இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- கடுப்பு பாகம் 1 இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- கடுப்பு பாகம் 2 என்ன படிச்சுட்டிங்களா? நான் எதை பத்தி புலம்பிட்டு இருக்கேன்னு புரிஞ்சுருக்குமே, சரி விசயத்துக்கு வருவோம். நான் இது மாதிரி என் கூட வேலை பார்க்கற அல்டாப்ஸ் பத்தி எழுதறத படிச்ச என் சக ஊழியர்கள் தனித்தனியா ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம வந்து என்னை பார்த்து அவங்க அனுபவங்களை சொல்லி அதையும் எழுத சொன்னாங்க. அவங்க பேர் வெளிய வரக் கூடாதுனும் சொன்னாங்க, ஏதோ இந்த அளவுக்காவது சொல்றாங்களேனு சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான். ஆச்சர்யம் என்னன்னா சில பெண்களும் வந்து சொன்னதுதான். சரி கேள்விய ஆரம்பிப்போம். பொன்னுங்க புடவை எதுக்கு கட்டறாங்க? அதுல என்ன ஸ்டைல்? கட்டும் போது அவங்களுக்கு பிடிச்ச ஸ்டைல்ல கட்

காதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு- தொ(ல்)லை/குறும்படம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், எப்பொழுதும் என் விருப்பம் குறும்படம் தான். கதையே இல்லாமல் இரண்டரை மணி நேரம் சினிமா எடுக்கிறார்கள், ஆனால் தான் சொல்ல வேண்டிய விசயத்தை 15 நிமிடங்களுக்குள் சொல்ல எவ்வளவோ உழைக்கும் இந்த குறும்பட இயக்குனர்களுக்கு ஒரு பாராட்டை தெரிவித்துக் கொண்டு நாம் பதிவிற்கு செல்வோம். தொ(ல்)லை- இந்த வார்த்தைக்கான அர்த்தம் எத்தனை பேருக்கு புரியுதோ இல்லையோ டார்ச்சர்னு தூய தமிழ்ல சொன்னா எல்லாருக்கும் புரியும்னு நினைக்கறேன். அதே மாதிரி இந்த டார்ச்சர லவ் பன்னாதவங்களால முழுசா புரிஞ்சுக்க முடியாது. காதல் இன்பமானது, எல்லா பிரச்சனையையும் மறக்கவைக்க கூடியதுங்கறது உண்மைதான். ஆனா அந்த நல்ல காதல் எல்லோருக்கும் கிடைக்கறது இல்லை, அதிகமா சண்டை மட்டுமே போடற காதல் தான் இப்ப பரவி கிடக்கு. அந்த மாதிரி சந்தேக படற, சண்டை மட்டுமே போடற சாவடிக்கற காதலால் பாதிக்க பட்டவந்தான் கதையோட ஹீரோ. அவன் எப்படி எப்படிலாம் அவன் ஆள்கிட்ட போன்ல பாட்டு வாங்கறாங்கறதை சீன் பை சீனா காட்டராங்க. அந்த சாங் கொஞ்சம் அதிகம் தான், இட்ஸ் ஓகே. எல்லாத்தையும் வெறுத்து தற்கொலை பன்னிக்க போற நம்ம ஹீரோவ அப்ப கூட போன போட்டு சந்தேக

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2

Image
அன்பர்களுக்கு வணக்கம், என்னோட முதல் புலம்பலை படிக்காதவங்க தயவு செஞ்சு படிச்சுருங்க. இல்லைனா ஒரு கன்டினுயுட்டி மிஸ் ஆகும். இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 1  படிச்சுட்டிங்கனா நான் எதை பத்தி பேசறேங்கறது உங்களுக்கு நல்லா புரியும். என்னோட புலம்பல் ஒட்டு மொத்த பெண்கள் சமுதாயத்தை குறிப்பிடறதா தப்பா நினைக்க வேண்டாம். என் வாழ்க்கைல தினசரி எதிர்படற, பார்க்கும் போதுலாம் ஒரு 2 செகன்ட் கண்ணை மூடி "முடியலைடா சாமி"னு சொல்ல வைக்கற சில அல்டாப் ஆண்ட்டி & ஃபிகர்களை மட்டும்தான் நான் திட்டி தீர்க்கனும்னு நினைக்கறேன். உங்ககிட்ட ஒரு விசயம் சொல்றங்க, நீங்களும் முயற்சி பண்ணி பாருங்க, எப்பவாவது ஏன்னே தெரியாமா ரொம்ப சலிப்பா, அலுப்பா எந்த வேலையும் செய்யறதுக்கு மனசே வராம இருக்கும் போது ரொம்ப நாளா உங்களை வெறுப்பேத்தறவங்களை, யார்கிட்டயாவது திட்டி புலம்பி பாருங்க அப்படி ஒரு எனர்ஜி வரும், உற்சாகம் பிறக்கும், நான் சொல்லும் போது பைத்தியகாரத்தனமா இருக்கும், ட்ரை பன்னிங்கனா கண்டிப்பா என்னை குருவா ஏத்துகிட்டு ஆசிரமம் ஆரம்பிக்கலாமானு கேட்பிங்க.   சரி, நாம புலம்பல

இந்த கொடுமைக்கு பேசாமா கல்யாணமே பன்னிக்கலாம்

Image
அன்பர்களுக்கு இனிய வணக்கம், இன்று நான் எழுத போவது ஒரு பேச்சிலர் வாழ்வில் ஏற்படும் துயரங்கள், பெருசா ஒன்னுமில்லைங்க, காலைல எழுந்ததுலருந்து நைட் தூங்க போற வரைக்கும் கல்யாணம் ஆகாத பசங்களை யார்யார்லாம் கடுப்பேத்தி காயப்படுததறாங்கனு பார்ப்போம். காலைல 4 மணிக்கு மேலதான் நல்லா தூக்கம் வரும், அப்பதான் வீட்ல பெத்தவங்க எழுப்பி பால் வாங்கிட்டு வர சொல்றது, தண்ணீர் பிடிச்சு வைக்க சொல்றதுனு வேலை வைப்பாங்க, அதை செய்யலைனா என்னமோ முதியோர் இல்லத்துல கொண்டு போய் சேர்த்துட்ட மாதிரி அக்கம்பக்கத்துல புலம்ப ஆரம்பிப்பாங்க. சரீன்னு அதுக்கு பயந்து வேலையா செய்யலாம்னு வெளிய வந்தா கோலம் போடறேங்கற பேர்ல தெருவுல வரிசையா கல்யாணம் ஆனது ஆகாததுனு 2 கேட்டகிரிலயும் பொன்னுங்க நிப்பாங்க, நான் அதை தப்பு சொல்லலை, அவங்க வேலைய அவங்க பார்க்கட்டு, என் வேலைய நான் பார்க்கறேன், எதுக்கு எங்களை(பேச்சுலர்ஸ்) பார்த்ததும் நல்லா கவர் பன்னிருக்க ஏரியாவையும் திரும்ப ஒரு தரம் கவர் பன்னனும்னு கேட்கறேன்? நாங்க என்ன ஏதாவது தப்பா பார்த்தமா?கைய பிடிச்சு இழுத்தமா?  வீட்ல இருக்க சின்ன சின்ன வேலைய முடிச்சுட்டு வேலைக்கு போலாம்னு கிளம்புனா

சகுனி - திரை விமர்சனம்

Image
செங்கோவி: சகுனி - திரை விமர்சனம் :  காரைக்குடி கார்த்தியின் ஒரே சொத்தான செட்டிநாட்டு பெரிய பங்களாவை ரயில்வே புராஜக்ட்டுக்காக அரசு எடுத்துக்கொள்ளப்போவதாக அறிவிப்பு வருகிறது. தன் பங்களாவைக் காப்பாற்றிக்கொள்ள, ரயிவே அமைச்சர்-முதல்வர் என அரசியல்வாதிகளைப் பார்த்து முறையிட சென்னை வருகிறார் முதல்வர். அப்பாவி பொதுஜனமாக முறையிட்டால், எந்த மரியாதையும் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டு, கார்த்தி எடுக்கும் அவதாரமே ‘சகுனி’.முழு விமர்சனமும் படிக்க கீழே சொடுக்கவும். செங்கோவி: சகுனி - திரை விமர்சனம் : 

"என்ன சொல்ல வரன்னா" - கதையில்லாத வித்தியாசமான குறும்படம்

Image
அன்பர்களுக்கு வணக்கம். எனக்கு தெரிந்து நான் எழுதிய பதிவில் குறுகிய காலத்தில் அதிகம் பேர் பார்த்தது " ஊருக்கு 4 பேர் " " ராமசாமி " குறும்படங்களை பற்றிய பதிவுகள் தான். என்னதான் கோடிகோடியா செலவு பன்னி படம் எடுத்தாலும் சில நேரத்துல கதை ஊத்திகிச்சுனா மொக்கையா போய்டும், அந்த வகைல குறும்படம் பல வகைல பரவாயில்லை, ஏற்கனவே " சொத்தை பொன்னு " குறும்படத்துலயும் பெருசா கதை இல்லனாலும் ஜனங்ககிட்ட நல்லா போய் சேர்ந்தது. அதே மாதிரி கதையில்லாத ஆனா நல்லாயிருக்க ஒரு குறும்படத்தை பத்தி பார்ப்போம். படத்தோட பேர் "என்ன சொல்ல வரேன்னா". தலைப்பு வித்தியாசமா இருக்கேனு பார்த்தேன். கண்டிப்பா கதை இருக்காது, ஏதாவது காமெடியா முடிக்க போறாங்கங்கறது படம் ஆரம்பிச்சவுடனேயே தெரிஞ்சது. அதேதானுங்க. எடுத்ததும் ஒரு ரெஸ்டாரண்ட், ஒருத்தர் வர்ரார், கெத்தா உட்கார்ரார், கையில வச்சுருக்க ஏதோ பேப்பர் அ பார்க்கறார், சர்வர்கிட்ட சலிச்சுகிட்டே ஆர்டர் பன்றார். அப்பப்ப பக்கத்துல உட்கார்ந்துருக்க ஃபிகர் அ சைட் அடிக்கறார்(இவர் நம்ம ஆளுங்கோ) திடிர்னு ஒருத்தன் அவருக்கு குறுக்க வர்ரான், நாகர

பழகிய முகங்களை மறக்கும் பெண்-FACES IN THE CROWD- திரைவிமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், தற்போதைய சூழலில் சினிமா பார்க்காதவர்கள் யாருமில்லை, அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை. சிலருக்கு காதல் படங்கள், சிலருக்கு ஆக்சன், சிலருக்கு காமெடி என்று விதவிதமாக இருப்பார்கள், எனக்கு எப்பொழுதும் ரொமென்டிக் காமெடி வகை படங்கள் தான் மிகப் பிடிக்கும். நமது சகப்பதிவர் ஜாக்கி சேகர் அனைத்து விதமான உலக சினிமாக்களையும் பார்த்து, நம்முடன் பகிர்ந்து கொள்வார், அவரது அறிமுகத்தில் வித்தியாசமான கதைக்களமாக பட்டதால் இந்தப் படத்தை பார்த்தேன். படத்தின் பெயர் "FACES IN THE CROWD".   சராசரியாக தோழிகளுடன் அரட்டையும் சிறுபிள்ளைகளுக்கான பள்ளியில் ஆசிரியர் பணியும் மனதுக்கு பிடித்தவருடன் வாழ்க்கையும் என அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் கதா நாயகிக்கு எதெச்சையாக ஒரு அதிர்ச்சி தரக் கூடிய சம்பவம் நடக்கிறது. யாருமில்லா பாலத்தில் நடந்து செல்லும் போது ஒரு கொலையை தற்செயலாக பார்க்கும் ஹீரோயினை கொலைகாரன் துரத்தி பிடித்து பாலத்திலிருந்து தள்ள மண்டையில் பலத்த காயத்துடன் ஆற்றில் விழுகிறார். ஆஸ்பத்திரியில் கண் விழிக்கும் கதா நாயகிக்கு பெரும் அதிர்ச்சி, வாழ்வின் அனைத்தும் ந

வயது 14- சொல்வது 'அவர் இல்லைனா நான் செத்துடுவேன்'- யாரோட தப்பு இது? சொல்வதெல்லாம் உண்மை

Image
அன்பர்களுக்கு வணக்கம், எனது முந்தைய பதிவில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலமாக கொலை செய்தவர் போலிஸில் மாட்டியதை பற்றி எழுதி இருந்தேன். அந்த எபிசோடுக்கு பின் என்னை மீண்டும் பார்க்க வைத்த எபிசோட் உண்மையில் நெஞ்சை கனக்க வைத்தது. அதை பற்றி இங்கு காண்போம். வழமை போல் சக பதிவரின் அறிமுகம் மூலமாகத்தான் இந்த எபிசோட் பற்றியும் தெரிந்து கொண்டேன். ஆரம்பிக்கும் பொழுதே அதிர்ச்சியை தந்த விசயம் காதலர்கள் என்று சொல்லிக் கொண்டு ஒரு 21 வயது பையனுடன் 14 வயது சின்ன பென்னை காட்டியதுதான். அதிலும் பேச ஆரம்பித்த உடனேயே அந்த சிறு பெண் எடுத்ததும் 'இவர் இல்லைனா நான் செத்துடுவேன்'னு சொல்லி அழும் பொழுது 'என்ன கொடுமைடா இது?' என்று பார்ப்பவர்களே தலையில் அடித்துக் கொள்வார்கள். இந்த வாரம் நிர்மலா மேடம் கொஞ்சம் சரியான கேள்விகளை கேட்டார் என்பதை மனமாற ஒத்துக் கொள்வேன். அவை "எதுக்காக இந்த வயசுல காதலிச்ச?" "உங்க அப்பா அம்மா காட்டாத எந்த பாசத்தை இந்த பையன் உனக்கு காட்டிட்டான்?" "செத்துடுவேன்னு உங்க சுய நலத்துக்காக நீங்க  மிரட்டறதுல எத்தனை பசங்க பாதிக்க படற

மகளை புணர்வுக்கு அழைத்த கொலைகார தந்தை- 'சொல்வதெல்லாம் உண்மை'யால் போலிசில் சிக்கினார்

Image
அன்பர்களுக்கு வணக்கம். எனது முந்தைய பதிவில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியினை எவ்வாறு பார்க்க ஆரம்பித்தேன் என்பதினை பற்றி கூறியிருந்தேன். அதில் நான் பார்த்த முதல் எபிசோட் பற்றி கூறியதில் அந்த நிகழ்ச்சி என்னுள் பத்தோடு பதினொன்றாகதான் பதிந்ததை சொல்லவில்லை. ஆனால் அடுத்து நான் பார்த்த எபிசோட் என்னை இந்த நிகழ்ச்சி பற்றி மற்றவர்களுடன் பேச வைத்தது. அதை பற்றி இப்பதிவில் காண்போம். இரண்டாவது முறையும் சக பதிவர்கள் மூலமாகத்தான் இந்த எபிசோட் பற்றி தெரிய வந்தது. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் பொழுது வழமையாக ஒவ்வொருவர் பற்றிய அறிமுகத்துடன் தொடங்கியது. வழக்கம் போல் மேஜர் ஆகாத பெண்ணின் காதல் பிரச்சனையை பற்றித்தான் பேச ஆரம்பித்தார்கள். எனக்கும் உண்மையில் கொஞ்சமாக போரடிக்க துவங்கியது. ஆனால் சம்பந்த பட்ட பெண் (பார்கவி) பேச துவங்கும் வரைதான். தனது தந்தையும் தாயும் காதலித்து திருமணம் செய்து கொண்டு தனது காதலை எதிர்ப்பது பற்றி குறிப்பிட்டார். நிர்மலா பெரியசாமியும் வயது வரும் வரை காத்திருக்க சொல்லி அறிவுரை கூறவும் தான் விசயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளி வரத் துவங்கியது. தனது தந்தை ஒரு வகையான காமக் கொடுரன் என்பத

சொல்வதெல்லாம் உண்மை- அவசியம் சொல்லனுமா?

Image
அன்பு நண்பர்களுக்கு வணக்கம், கொஞ்சம் இடைவெளி, காரணம் பெரிதாய் ஒன்றுமில்லை, பதிவு போட ஆரம்பித்தால் தொடர்ந்து போடுவது, இல்லையென்றால் பேஸ்புக்கை மட்டும் நோண்டி கொண்டிருப்பது, என்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை. சரி இன்றைய எனது பதிவு ZEE  தொலைக்காட்சியில் நிர்மலா பெரியசாமி நடத்தும் "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சி பற்றியது. நம் அனைவருக்கும் தெரியும் இது போல ரியாலிட்டி ஷோக்களை தமிழில் பெரிதும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்த பெருமை விஜய் டீவியை சாரும். வாரவாரம் யாரையாவது கூட்டிக் கொண்டு வந்து அழ வைப்பார்கள். வழக்கமாக சன் டீவியில் சீரியில் பார்த்து அழும் பெண்களுக்கு இந்த புது வித அழுகை மிகவும் பிடித்திருந்தது. TRB ரேட் எகிறிட்டு போச்சு, உடனே ஒவ்வொரு சேனலும் அவங்கவங்க பங்குக்கு ஒவ்வொருத்தரையா கூட்டிட்டு வந்து அழ வைக்க ஆரம்பிச்சாங்க. அடுத்து சமுக அக்கறைல கவனம் செலுத்தற மாதிரியான நிகழ்ச்சிகள் பன்ன ஆரம்பிச்சாங்க, உதாரணத்துக்கு "நீயா நானா, குற்றம்- நடந்தது என்ன" இது மாதிரி ஒவ்வொரு சேனலும் ஆளுக்கு ஒன்னா ஆரம்பிக்கவும் தங்களோட பங்குக்கு ZEE தமிழ் ஆரம்பிச்சததுதான் இந்த 'ச

மனம் கொத்தி பறவை- விமர்சங்களுக்கு விமர்சனம் என் பார்வையில்

Image
அன்பு நண்பர்களுக்கு வணக்கம். மற்ற பதிவர்களை போல் வாரவாரம் வெள்ளிக்கிழமை தோறும் வெளிவரும் படங்களை உடனுக்குடன் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைப்பதில்லை. சமிபத்தில் திரைக்கு வந்த 'மனம் கொத்திப் பறவை' திரைப்படத்தினை நேற்றுதான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தினை பற்றிய என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலில் இப்படத்தினை பார்க்க விரும்பியவர்களில் பாதிப் பேர் சிவாவின் விசிறிகளாகத்தான் இருப்பார்கள். நானும் அவர்களில் அடக்கம். படத்தில் கதை ஒன்றும் பெரிதாக இல்லை. வெவ்வேறு சமுகத்தை சேர்ந்த இரு குடும்ப்ங்கள் எதிரெதிரில் இருந்தாலும் நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள். அதில் கன்னனாக வரும் சிவகார்த்திக்கேயன் எதிர்வீட்டு ரேவதியை ரொம்ப நாளாக காதலித்து வருகிறார்.காதலிக்கும் அனைவரும் செய்யும் தவறைத்தான் அவரும் செய்கிறார். காதலை காதலியிடம் சொல்லாமல் தன் நண்பர்களுடன் பகிர்தல்.  அப்புறமென்ன வழக்கம் போல் வீட்டில் ஒரு முரட்டு மாப்பிள்ளைக்கு ஹீரோயினை நிச்சயம் செய்ய, சராசரி தமிழனாக குடித்து விட்டு புலம்புகிறார். பின்னே 20 பேரை அடிக்க அவர் என்ன தனுஸ் போல ஆக்ஸன் ஹீரோவா?

விஸ்வரூபம் திரைப்படத்தின் உண்மையான ட்ரெய்லர்

Image
அன்பு நண்பர்களுக்கு வணக்கம். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த உலக நாயகன் கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தின் அசத்தும் ட்ரெய்லர் YOUTUBE ல் வெளியிட பட்டுள்ளது. கமலஹாசனை நாட்டியம் பயிற்றுவிப்பவராகவும் தீவிரவாதியாகவும் ஏதேதோ வேடத்தில் காட்டுகிறார்கள். இந்த படத்தில் எத்தனை கெட் அப்போ? அதை காண கீழே சொடுக்கவும்

"ராமசாமி- 50% நக்கல்+50%லொல்லு"- குறும்படம்

Image
அன்பு நண்பர்களுக்கு என் மகிழ்ச்சியான வணக்கங்கள், என் மகிழ்ச்சிக்கு காரணம் என்னன்னு கேட்டிங்கனா அது நீங்க தாங்க, ஆமாங்க எப்பவுமே என் ப்ளாக் ல 100-120 தான் அதிக பட்ச விசிட்டர் வந்துருக்கறது, ஏப்ரல் முதல் நாள் அனுஷ்காக்கு ஆக்சிடென்ட் னு ஒரு பிட் அ போட்டேன் பார்த்தீங்களா அன்னைக்குதான் கூட்டம் 150 அ தாண்டுனுச்சு. இன்னைக்கு என்னடான்னா நான் எந்த பதிவும் போடாமயே சாயந்தரத்துக்குள்ள 160 க்கு மேல லிஸ்ட் எகுறுது. ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. சரி வந்தது வந்துட்டோம், ஒரு விமர்சனத்தையும் போட்டுருவோம். இப்ப நாம பார்க்க போறது நாம் ஏற்கனவே பார்த்த " ஊருக்கு 4 பேர் " குறும்படத்தோட டீம் தயாரிச்ச "ராமசாமி"ங்கற குறும்படத்தை பத்திதான். படம் ஆரம்பிக்கும் போது எழுத்து போடறப்ப புகை பேக்ரவுண்ட்ல "சரஸ்வதி சபதம்" பட டைட்டில் மியுஸிக் போடுவாங்க பாருங்க, அங்கயே அவங்க நக்கல் ஆரம்பிக்குது. ஹீரோ அறிமுக படுத்திட்டு பார்க்கறவங்களுக்கு ஒரு எச்சரிக்கை குடுப்பாங்க, அது என்னன்னா "இவனுக்கு எப்படி வாழ்க்கைல ஒரு லட்சியம் கிடையாதோ அதே மாதிரி இந்த படத்துல கதையும் கிடையாதுங்க, இஷ்டமில்லைன

ஊருக்கு 4 பேர்- AWARD WINNING SHORT FILM/குறும்படம்

Image
 அன்பு நண்பர்களுக்கு வணக்கம். பொதுவா பார்த்தீங்கனா சினிமால எடுத்துக்கற கருத்தையே திரும்ப எடுத்து குறும்படத்துல பன்னும் போது அது பெருசா ஜெயிக்கறதில்லை. அந்த நேரத்துல சமுகத்துல எந்த பிரச்சனை பெருசா பேசப் படுதோ அதை ஜனங்க ரசிக்கற விதத்துல பன்னா தானா ஜெயிச்சுருது, ரசிக்கற மாதிரி எடுக்கறது வேற ஒன்னுமில்லைங்க காமெடியா எடுக்கறதுதான் சொல்றேன், ஏன்னா பல பேர் குறும்படம்னா தெறிச்சு ஓடுறதுக்கு காரணம் அதுல காட்டற தேவையில்லாத அதிக பட்சமான சோகம் தான்.சரி நம்ம படத்தை பார்ப்போம். "ஊருக்கு 4 பேர்"- படம் ஆரம்பிக்கும் போது சத்தியமா நான் எதிர்பார்க்கலீங்க, இந்த டீம் எடுத்துருக்க கான்செப்ட் 'எம்பளம்' பத்தி இருக்கும்னு, ஏன்னா அத வச்சு எப்படி எடுக்க முடியும்னு யாருமே யோசிக்கலை போல,  இந்த எம்பளம்னா என்னன்னு சொல்லவே இல்லை பாருங்க, அதாவது ஒரு குறிப்பிட்ட தொகைய பணமா கட்டி ஒருத்தருக்கு கீழே நாம் சேரும் போது நாம கட்டுன பணத்துக்கு 50%க்கான ஏதாவது ஒரு பொருளை குடுத்துருவாங்க, அப்ப மீதி பணத்தை எப்படி திருப்பி எடுக்கறதுனா நாம அலைஞ்சு திரிஞ்சி நமக்கு கீழே ஆள் சேர்த்தனும், அவங்க கட்டுற பணத்

குடும்பஸ்தனாக இருப்பதற்கு ஒரு வாரம் விடுமுறை/ HALL PASS-REVIEW/திரை விமர்சனம்

Image
 அன்பு நண்பர்களுக்கு இனிய வணக்கம். எல்லாரும் சிறு வயதில் ஹாலிவுட் என்றால் அனகோண்டா, காட்சில்லா மாதிரியான படங்களையும் அல்லது சூப்பர் மேன்,ஸ்பைடர் மேன், நார்னியா மாதிரியான படங்களையும் மட்டுமே விரும்பி பார்ப்போம். அதன் பின் காதல்மற்றும் ஆக்ஸன் படங்கள், உதாரணம் டைட்டானிக்,டெர்மினெட்டர்,க்ளாடியேட்டர். ஒரு 25 வயதிற்கு பின் வேலைப்பளுவை மனம் தாங்க முடியாமல் தினறும் சமயத்தில் பார்க்க தோன்றும் படம் தான் இந்த வகையான FEEL GOOD வகையான படங்கள். கதையென்று பெரிதாக ஒன்றும் இருக்காது. ஆனால் போரடிக்காமல் போகும். க்ளைமேக்ஸ் அதிக ப்ட்சம் பாஸிட்டிவ் ஆகத்தான் இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகும் படம் HALL PASS.    நம்மில் சிலருக்கு இந்த பழக்கம் கட்டாயம் இருக்கும் என்று நம்புகிறேன். அதுதான் பெண்களை சைட் அடிப்பது, அங்கம் அங்கமாக ரசிப்பது, அவர்களை பற்றி நண்பர்களுடன் வேறு மாதிரி விவாதிப்பது போன்றவை, இந்த படத்தில் வரும் 2 ஹீரோக்களுக்கும் இதுதான் பொழப்பே. இவர்களையும் குறை சொல்ல முடியாது, ஏனென்றால் இவர்களுடைய மனைவி சரியாக கவனிப்பது இல்லை. அதற்கு காரணம் எங்கே இவர்கள் ரசிக்கும் பெண்களை நினைத்துக்

மாலை நேரம்-குறும்படம்

Image
 அன்பு நண்பர்களுக்கு வணக்கம், சாதாரணமா ஒரு படம் பார்த்து முடிக்க 2 மணி நேரத்துக்கு மேல ஆகும், ஹாலிவுட்னா பராவாயில்லை ஒரு 1.30 மணிக்குள்ள பார்த்துடலாம், அந்த அளவுக்கு கூட டைம் இல்லாதப்ப பார்க்கறதுக்குனுதான் குறும்படங்களை நெட் ல இறக்கி வச்சு பார்க்க ஆரம்பிச்சேன். அந்த வகைல எனக்கு ரொம்ப பிடிச்ச காதல் அ அருமையா சொன்ன குறும்படம் இந்த "மாலை நேரம்". ஒரு நாள் எதெச்சையா ஒவ்வோரு சேனல் ஆ மாத்திட்டு இருக்கும் போது நம்ம கேப்டன் டீவில "கூத்துப்பட்டறை" னு ஒரு ப்ரோக்ராம், சரியா பேர் நினைவுல இல்லை தப்பா இருந்தா மன்னிச்சுக்குங்க. அதுல பாதிலருந்துதான் இந்த குறும்படத்தை பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது.அதுக்கு அப்புறம் நெட் ல தேடி எடுத்தேன். கதைனு பார்த்தீங்கனா பெருசா கருத்து சொல்ற மாதிரிலாம் இல்லைங்க, ஒரு சராசரி வாலிபனுக்கு போன் மூலமா ஒரு பொன்னோட அறிமுகம் கிடைக்குது. அவனும் ரொம்ப எதிர்பார்ப்போட போய் நேர்ல பார்க்கும் போது அது ஸ்கூல் படிக்கற சின்ன பொன்னுனு தெரியுது, அவனுக்கு என்ன பன்றதுனு தெரியாம குழம்பி, எரிஞ்சு விழுந்து எல்லாத்தையும் அந்த பொன்னு பொறுத்துகிட்டு எப