Posts

Showing posts from August, 2012

கண்ணா தப்ப தட்டி கேக்க ஆசையா?????????

Image
உங்க ஊரு நியாய விலை கடை , அதான் பா "ரேஷன் கடை" ல இருக்க அங்கிள்/ஆண்ட்டி ஸ்டாக் முடிஞ்சி போச்சின்னு சொல்றாங்களா?.. அவங்க பொய் சொல்றாங்கன்னு நீங்க/ஊர்ல வேற யாரும் நினைக்கிறாங்களா? ..வாங்க பாத்துடுவோம். உங்க மொபைல் ல இருந்து [PDS] [மாவட்டகுறியீடு] [கடைஎண்] //உதாரணத்துக்கு PDS 10 AA001 (இங்க 10 சேலம் மாவட்ட எண்,AA001 கடை எண்) அப்படின்னு டைப் பண்ணி 9789006492, 9789005450 இந்த ரெண்டு நம்பர் ல எதாச்சும் ஒண்ணுக்கு அனுப்புங்க.    உங்களுக்கு தகவல் உடனே கிடைக்கும். #மாலை 5 மணிக்குள்ள அனுப்ப முயற்சி பண்ணுங்க.. அப்புறம் என்ன நீங்களும் ரமணா தான்.. உங்க கடை எண்ணும்,மாவட்ட குறியீடும் உங்க ரேஷன் கார்டிலேயே இருக்கும்.#படத்தை பார்க்கவும். மேலும் தகவலுக்கு இந்த வலைபக்கத்தை பாருங்க.. http://www.consumer.tn.gov.in/ view_detail.asp?alertid=70  

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas)

Image
உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு.இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம். Omlec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 1

INDIANA JONES AND THE LAST CRUSADE- விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், நான் கடந்த நாட்களில் இல்லாத அளவுக்கு நான்கு நாட்களாக எந்த பதிவும் எழுதாமல் போனதற்கு பதிவர் சந்திப்பும், பவர் கட்டும் தான் காரணம், சரி அதை பற்றி தனிப்பதிவு போடுவோம். இப்ப நாம விமர்சனத்துக்கு வருவோம். நாம ஏற்கனவே INDIANA JONES படத்தோட முதல் மற்றும் இரண்டாவது பாகங்களை பார்த்துட்டோம். இன்னைக்கு பார்க்கப்போற படம் மூன்றாவது பாகம் INDIANA JONES AND  THE LAST CRUSADE. உண்மையிலேயே ஜீராஸிக் பார்க் படத்துல வெறும் பிரம்மாண்டம் மட்டும்தான் தெரிஞ்சது, இந்த படங்கள்ளதான் இயக்குனரோட திரைக்கதை அமைக்கற திறமையும் அதை ஜனரஞ்சகமா சொல்ல அவர் பட்ட கஷ்டமும் புரியுது. ஏன் நம்ம நாட்டுல இது மாதிரி படம் வர மாட்டேங்குது? இதுக்கு முந்தின பாகங்களை பார்த்தவங்களுக்கு ஹீரோவா நடிச்சுருக்க ஹாரிசன் ஃபோர்ட்க்கு என்ன கதாபாத்திரம்னு சொல்ல தேவை இல்லை, இருந்தாலும் இன்னொரு முறை சொல்லிடறேன், ஒரு வரலாறுல ஆர்வம் அதிகம் இருக்க அகழ்வாராய்ச்சில அப்பப்ப ஈடுபடறோதட இல்லாம நாட்டோட பொக்கிஷங்கள் வெளிய போயிட கூடாதுனு வம்பிழுக்கற ஆள். அவங்கப்பாவும் ஒரு அகழ்வாராய்ச்சியாளர். சின்ன வயசுல கெட்டவங்ககிட்ட

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பாம்பு வளர்ப்புத் தொழில்...!!

Image
(ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒரே கோர்வையா படித்தால் மட்டும் கடைசியில் உள்ள ஆச்சரியம் புரியும்) குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பாம்பு வளர்ப்புத் தொழில்...!! கரு நாகப்பாம்பு வளர்ப்பது எப்படி கரு நாகப்பாம்பு வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பண்ணை அமைத்து சிரத்தையுடன் தொழிலில் ஈடுபட்டால் லாபத்தை அள்ளலாம் என்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை யில் ‘ஸ்னேக் ஃபார்ம் இந்தியா’ நடத்திவரும் பீனிக்ஸ் பாலா கூறுகிறார் . 2004ம் ஆண்டு 5 ஜோடி கரு நாகப்பாம்புகளுட ன் பெருந்துறையில் பண்ணை துவங்கினேன். அவை முட்டையிட துவங்கியதும் வேறொரு பண்ணையாளரிடம் கொடுத்து குஞ்சு பொரிக்க செய்து, அவற்றையும் சேர்த்து வளர்த்தேன். கரு நாகப்பாம்பு வளர்ப்பையே முழு நேர தொழிலாக மேற் கொண்டேன். தமிழகத்தில் கரு நாகப்பாம்பு எண்ணிக்கை குறைவு. ஒப்பந்த அடிப்படையில் கரு நாகப்பாம்புகளை வளர்க்க விவசாயிகளிடம் ஆர்வத்தை உருவாக்கினேன். சிரமம் இல்லாத வளர்ப்பு முறை, அதனால் கிடைக்கும் வருமானத்தை பார்த்து இன்று தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையிலும், சொந்தமாகவும் ஆயிரக்கணக்கானோர் இந்த தொழ

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், நமக்கு எப்பவுமே ஒரு படத்தை பார்த்தா அதோட முதல் பார்ட்லருந்து பார்த்தாதான் புரியும், இல்லைனா சும்மாவே அவங்க பேசற இங்கிலிஸ் புரியாது, இதுல யாருக்கு யார் என்ன உறவுனு தெரியலைனா விளங்கவே விளங்காது. அதான் INDIANA JONES படத்தோட எல்லா பார்ட்டையும் எடுத்து வச்சு ஒவ்வொன்னா பார்த்துட்டு இருக்கேன். இப்படத்தின் முதல் பாகம் விமர்சனம் படிக்க... இதோட 2 வது பார்ட் Indiana Jones And The Temple Of Doom, கதைக்களம் நம்ம இந்தியா, வழக்கம் போல முதல்ல வில்லன்கிட்ட சண்டை போட்டு ஹீரோயிசம் காட்டி தப்பிக்கும் போது செவனேன்னு பாடிகிட்டு இருந்த ஹீரோயின இழுத்துகிட்டு ஒரு ஃப்ளைட் ல ஏறிடறார். கொடுமை என்னன்னா அந்த ஃப்ளைட் வில்லனுக்கு சொந்தமானது. பாதி வழில பெட்ரோல் அ பிடிங்கி விட்டுட்டு பைலட் 2 பேரும் இருக்கற பாரசுட்லாம் எடுத்துகிட்டு குதிச்சுடறாங்க, இருக்கற போட் ல குதிச்சு தப்பிக்கறாங்க, அப்புறம் தான் அவங்க வந்து சேர்ந்துருக்க இடம் இந்தியானு தெரிய வருது. நம்ம ஆர்க்கியாலஜிஸ்ட் ஹீரோ, அழகான ஹீரோயின், அவங்களுக்கு கூட வர்ர குட்டிப்பையன் 3 பேரும் ஒரு கிராமத்துக்கு போய் டெல்லிக்கு

பா.ஜ.க வால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பலன் என்ன?

Image
பா.ஜ.க வால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பலன் என்ன என்று பார்போம் .. 1.பா.ஜ.க ஆட்சிகாலத்தில் ,தமிழ்நாட்டிற்கு போதுமான நிதி வழங்கப்பட்டது. 2.மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. 3.கச்சதீவை மீட்காவிட்டாலும் மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது .ஒரு மீனவர் உயிர் இழந்தவுடன் வாஜ்பாயே இலங்கை பிரதமரை தொலை பேசியில் எச்சரித்தார். 4.சிங்கள ராணுவத்திற்கு ஆயுதங்கள்; காசிற்கு கூட விற்கப்படவில்லை. இதை பற்றி வைகோவே பலமூறை வாஜ்பாயை பாராட்டி உள்ளார். 5.தேசிய நதி நீர் இணைப்பு திட்டம். இது நிறைவேறி இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு இருக்காது. அடுத்து வந்த காங்கிரஸ் அரசோ நதி நீர் இணைத்தால் நாடு கடலில் மூழ்கிவிடும் என்று இத்திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது.   ஆட்சியை இழந்த பின்னரும்:: 1.தமிழ்நாட்டிற்கு மின்சாரம் 200 MW குஜராதில் இருந்து வருகிறது. 2.தமிழக மீனவர்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசிய ஒரே தேசிய கட்சி பா.ஜ.க தான். 3.தமிழக மீனவர்களுக்காக தமிழ் நாட்டிற்க்கு வெளியே டில்லியில் ஆர்பாட்டம் நடத்திய கட்சி பா.ஜ.க தான். 4.இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் மத்திய அரசை எதி

INDIANA JONES - RAIDERS OF THE ARK திரை விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், ஒவ்வொரு படங்கள் நம் மன நிலையில், நாம் பார்க்கும் தொழில்களை பற்றிய பார்வையினையே மாற்றி விடும், தொடர்ச்சியாக உளவாளிகளையும், போலிஸ் ஆபிசர்களையும் மட்டும் ஹீரோவாக காட்டி வந்த சினிமாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை பற்றிய பார்வையினையே மாற்ற வைத்த படம் தான் INDIANA JONES - RAIDERS OF THE ARK .   ஸ்டீபன் ஸ்பில்பெர்க் என்ற பெயரை கேள்விபடாதவர்கள் மிகக் குறைவு, நான் முதன்முதலில் காதலன் படத்தில் பிரபு தேவா "ஸ்டீபன் ஸ்பில்பெர்க் படம்பா, அதான் யோசிக்காம போயிட்டன்"னு சொல்லும் போதுதான் அந்த பேரை கேள்விபட்டேன். அதுக்கப்புறம் எல்லாருக்கும் தெரிஞ்ச ஜிராசிக் பார்க் படம் போதும் அவர் பேர் சொல்ல.  அந்த வகையில அவர் எடுத்த வித்தியாசமான முயற்சினு இந்த படத்தை சொல்லலாம். ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்குனு ஒரே திரைக்கதைதான் இருக்கும், ஒரு அறிமுகம், புது ஆயுதங்கள், கொஞ்சம் கில்மா சீன்னு ஒரே மாதிரிதான் இருக்கும்.   அதே மாதிரி இன்டியானா ஜோன்ஸ் படங்களுக்கான அறிமுகம் அவர் ஆரம்பத்துல ஒரு ஆபத்தான இடத்துக்கு போய் அவர் திறமைய காட்டி, தப்பிச்சு வரதுதான். அப்புறம் இந்த படத்துல

குவாரி கொள்ளையில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. குடும்பம்?

Image
மதுரை, மேலூர் பகுதியைச் சுற்றி பல கிலோ மீட்டர்கள் தூர பகுதிகள் வளைக்கப்பட்டு, சட்டத்துக்குட்பட்டும்... சட்டத்துக்கு விரோதமாகவும் குவாரிகள் அமைக்கப்பட்டு பல லட்சம் கோடி ரூபாய்கள் சுருட்ட பட்டுள்ளன. நேற்றைய ஆளுங்கட்சி... இன்றைய ஆளுங்கட்சி என்று எல்லா கட்சிகளும் மூட்டை மூட்டையாக பணத்தை வாங்கிக் கொண்டு இந்தக் கொள்ளைக்கு துணை போயிருக்கின்றன. இதன் காரணமாக வயல்வெளிகளும், கண்மாய்களும் காணாமல் அடிக்கப்பட்டுள்ளன. இதனால் நொந்து போன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் என்று பலரும் மனுயுத்தம் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள்! ஜூனியர் விகடன் உள்ளிட்ட பத்திரிகைகளிலும் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே கட்டுரைகள் எழுதப்பட்டு வருகின்றன. இந்நிலையில்... திடீர் என்று சமீப காலமாக குவாரி கொள்ளையர்கள் மீது நடவடிக்கை பாய்ந்து கொண்டிருக்கிறது. ‘அதன் பின்னணி என்னவாக இருக்கும்?’ என்கிற ஆராய்ச்சி ஒருபுறமிருக்க... குவாரி கொள்ளைக்கு எதிராக போராட்டங்களை நடத்திவரும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இதைப் பார்த்து பெரு மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தா.பாண்டியன், 'இந்த நட

புதையலை தேடும் சிறுவர்கள் - THE GOONIES விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், சில படங்கள் தான் எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் எந்த காலகட்டத்திற்கும் பொருந்துவது போல் இருக்கும், சில படங்கள் தான் எல்லா வயதினராலும் ரசிக்கப்படும், அந்த வகையில் தமிழில் ஒரு உதாரணம் கூறுவதென்றால் "தில்லு முல்லு" படத்தை கூறலாம். ஆங்கில படங்களை எடுத்துக் கொண்டால் அதிக பட்சம் அவர்கள் படம் எடுப்பதே இதை குறிக்கோளாய் வைத்துதான் என நினைக்கிறேன், கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு முன் வந்த ஒரு படத்தினை சகப்பதிவரின் அறிமுகத்தால் பார்த்தேன், என்னால் முழுதாய் ரசித்து பார்க்க முடிந்தது, படத்தின் பெயர் "THE GOONIES" 15 வயதிற்கு முன்பு எல்லாருக்கும் ஒரு பழக்கம் இருக்கும், தாங்கள் படித்த அல்லது பார்த்த கதாபாத்திரங்களை மனதில் வைத்துக்கொண்டு ஒரு குருப் ஆக அலைவது, யாரும் இந்த வயதில் தனியாக இருக்க விரும்ப மாட்டார்கள், கண்டிப்பாக அந்த கூட்டத்தில் ஒரு ஹீரோ, காமெடியன், ஒரு விஞ்ஞானி இருப்பான், என் சிறுவயதிலும் அப்படித்தான், அப்படி இருக்கும் சிறுவர்களின் கூட்டத்தின் பெயர்தான் "THE GOONIES".   எதெச்சையாக வீடு சுத்தம் செய்யும் பொழுது கிடை

அட்டக்கத்தி - உலக சினிமா

Image
அன்பர்களுக்கு வணக்கம், ரொம்ப நாள் கழித்து தமிழ் படம் ஒன்றினை புதிதாய் ரசித்து பார்த்த மகிழ்வில் எழுதுகிறேன்.  இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவியாளர் இயக்கிய படம் என் தெரிந்ததுமே நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்ற நம்பிக்கையில் தான் படம் பார்க்க துவங்கினேன். நான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே படத்தில் இருக்கிறது. கொஞ்சம் விரிவாக அலசுவோம்.   தற்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்கிறது? ஒரு கட்டத்தில் இயக்குனர்களையும் கதையையும் நம்பி இருந்த சினிமா, பின்னர் ஹீரோக்களின் வசம் இருந்து தற்போது சந்தானம் போன்ற நகைச்சுவை நடிகர்களின் கையில் இருக்கிறது, அது காலத்தின் கட்டாயம், நான் யாரையும் குறை சொல்லவில்லை.ஓரு நல்ல உலகப்படம் எப்படி இருக்க வேண்டும்? கதையினை நம்பி இருக்க வேண்டும், கதைக்களம் இயல்பானதாய் இருக்க வேண்டும், நடிகர்கள் கதையில் வாழ்ந்திருக்க வேண்டும், படம் பார்ப்பவர்களுக்கு முடிந்த வரை அவர்கள் மனதின் பழைய அனுபவங்களை தூண்ட வேண்டும், கொஞ்ச நாட்கள் மனதில் அப்படம் அசை போட்டபடியே இருக்க வேண்டும், அந்த வகையில் "அட்டக்கத்தி" ஒரு உலக சினிமாதான். எனக்கு தெரிந்த வரை எந்த ஆங

படம்னா இது படம் THE TIME TRAVELERS WIFE - விமர்சனம்

Image
அன்பர்களுக்க வணக்கம், எத்தனையோ நாவல்களை படமாக எடுத்து பார்த்திருக்கிறோம், அனைவரும் அறிந்த படங்களென்றால் ஹாரிபாட்டர், லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ், தமிழில் நண்பன், விக்ரம், கரையெல்லாம் செண்பகப்பூ என நாம் அறியாத படங்கள் பல இருக்கின்றன. பொதுவாக பதிவர்கள் அறிமுகப்படுத்தும் படங்களை அவர்கள் விம்மர்சனம் படித்துவிட்டுத்தான் அப்படங்களை தரவிறக்கம் செய்து பார்ப்பேன், பெரும்பாலான ஹாலிவுட் படங்கள் நான் அவ்விதம் பார்த்ததுதான், சில நேரங்களில் எந்த அறிமுகமும் இல்லாமல் விக்கிபீடியாவில் எந்த வகையான படம் என்பதை மட்டும் பார்த்து தரவிறக்கம் செய்யும் பழக்கமும் உண்டு, அங்ஙனம் என்னையறியாமல் நான் பார்த்த ஒரு உலக சினிமா இப்படம் "THE TIME TRAVELERS WIFE" படத்தின் தலைப்பே நமக்கு படம் எத்தகைய கதைக்களத்தை கொண்டது என அறிவிக்கிறது, 6 வயதில் தாயுடன் காரில் செல்லும் ஒரு சிறுவன் பெரும் விபத்து நடக்கும் நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கரைய துவங்குகிறான், 2 வாரங்களுக்கு முன்பாக அவன் வீட்டில் நடப்பதை அவனால் பார்க்க முடிகிறது. மீண்டும் விபத்து நடக்கும் இடத்திற்கு வந்து தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறான். அப

ஏழை இந்துக்களுக்கான போராட்டம்

Image
அன்பர்களுக்கு வணக்கம்,சிறுபான்மை கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதுபோல் ஏழை இந்து மாணவ- மாணவிகளுக்கும் கல்வி உதவி தொகை வழங்க கோரி பாரதீய ஜனதா பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் 3 நாட்கள் தொடர் உண்ணா விரதம் இருக்கப்போவதாக பாரதீய ஜனதா தலைவர் பொன். ராதா கிருஷ்ணன் அறிவித்தார். சென்னையில் 3 நாள் உண்ணாவிரதத்துக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து மறைமலை நகரில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு மறைமலை நகரில் பொன்.ராதாகிருஷ்ணன் உண்ணாவிரதம் தொடங்கினார். அகில இந்திய செயலாளர் முரளிதர்ராவ், இல.கணேசன் ஆகியோர் வாழ்த்தினார்கள். மாநில அமைப்பு செயலாளர் மோகன்ராஜுலு, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சரவணபெருமாள், வானதி சீனிவாசன், சுரேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேதசுப்பிரமணியன், மாவட்ட தலைவர் கே.டி. ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதம் தொடங்கிய பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:- நாடு விடுதலையடைந்து 66 ஆண்டுகளில் சாதி, மதம், மொழி அடிப்படையில்

இல்லத்தரசிகள் ஜாக்கிரதை!

Image
அன்பர்களுக்கு வணக்கம், தொழில் நுட்பம் வளர வளர மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்ததோ இல்லையோ, பண்களின் பாதுகாப்பு குறைந்து கொண்டே வருகிறது, புதிதாய் வரும் கேமராக்களை பயன்படுத்தி பெண்களை துரத்தி துரத்தி வதைக்கிறார்கள், இதோ இதை படியுங்கள். மதுரை, சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த மூன்று இல்லத்தரசிகள் சமீபத்தில் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்கள். அதன் பின்புலத்தை ஆராய்ந்தபோது ஊருக்கே அதிர்ச்சி. அந்த ஏரியாவில் டீக்கடை நடத்தி வரும் ஒருவனும், எலக்ட்ரீஷியனாக இருக்கும் அவனுடைய சகோதரனும் சேர்ந்து, அங்குள்ள வீடுகளில் பிளம்பிங் வேலை, எலக்ட்ரீஷியன் வேலை, கேபிள் போன்றவற்றுக்காக சென்று வருவது வழக்கம். இதைப் பயன்படுத்திக் கொண்டு பல வீடுகளின் பாத்ரூம்களில் மினியேச்சர் கேமராக்களை பொருத்தி, குளியல் காட்சிகளை வீடியோ பதிவு செய்து, அதேபகுதியைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கும் இந்த இருவரும் விற்றிருக்கிறார்கள். இது, சம்பந்தபட்ட பெண்களின் கவனத்துக்கு வந்துவிட, சிலர் தற்கொலை முயற்சியில் குதித்து, காப்பாற்றப்பட்டுள்ளனர். பலர், வீட்டைவிட்டு வெளியில் வராமல் மனஉளைச்சலோடு முடங்கிக் கிடக்கிறார்கள். கயவர

சிம்புவின் CHENNAI ANTHEM

Image
அன்பர்களுக்கு வணக்கம், ஏற்கனவே தனுஷின் கொலைவெறி வந்து ஹிட் ஆன காலகட்டத்தில் காதலுக்கென்று LOVE ANTHEM வெளியிட்டு தன் பக்கம் மக்களை திரும்ப செய்தவர் நடிகர் சிம்பு, ஏற்கனவே இவரை பற்றிய கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லை, தற்போது சத்தமில்லாமல் சென்னைக்கென "வந்தாரை வாழ வைக்கும் ஊரு" என ஆரம்பிக்கும் CHENNAI ANTHEM ஐ சத்தமில்லாமல் வெளியிட்டுள்ளார். அந்த பாடலை பார்க்க பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

லஞ்சம் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை

Image
அவதி தரப்போகும் அடையாள அட்டை! 'ரயிலில், இரண்டாம் வகுப்பு பெட்டியில் (ரிசர்வ்) பயணம் செய்யும் பயணிகளும் இனி, அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்' என்ற விதியைக் கொண்டு வரப்போகிறது ரயில்வே துறை! புரோக்கர்கள் மூலமாக கள்ள மார்கெட்டில் டிக்கெட் விற்பதைத் தடுக்கவும்... தவறான நபர்கள் பயன் அடைவதைத் தடுக்கவும் இது பயன்படும் என்பது ரயில்வேயின் வாதம். ஆனால், இந்த விதியை நீட்டும்முன்பாக... நாட்டில் உள்ள எல்லா குடிமக்களுக்கும் அடையாள அட்டை கிடைத்துவிட்டதா என்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும். 'வாக்காளர் அடையாள அட்டையை தமிழகத்தில் 100 சதவிகிதம் கொடுத்துவிட்டோம்' என்று சில மாதங்களுக்கு முன் மாநில தேர்தல் ஆணையம் கூறியது. உடனே இதற்கு மறுப்பு தெரிவித்த பழ.நெடுமாறன், 'தாம்பரம் பகுதியில் வசிக்கும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இதுவரை வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கவில்லை' என்று கூறினார். இதையடுத்து, இந்த வரிசையில் பலபேர் இருக்கிறோம் என்று ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக பலரும் பதிவு செய்தனர். அடுத்து 'ஆதார் அட்டை' என்ற ஒன்றை

லல்லு யாதவ்வின் கொள்ளு பேரன் - காலேஜ் டைரி 6

Image
அன்பர்களுக்கு வணக்கம், என்னடா தலைப்பு கொஞ்சம் வித்தியாசமா இருக்கேன்னு பார்க்கறிங்களா? வெறுமனே தலைப்ப பார்த்துட்டு படிக்க ஆரம்பிச்சிங்கனா உங்களுக்கு சத்தியமா புரியாது. முதல் பதிவுல இருந்து படிச்சுட்டு வாங்க. இன்னைக்கு நம்ம காலேஜ் டைரில பார்க்க போற ஆள் சாதாரணமானவர் இல்லை, அவருக்கு சென்ட்ரல் வரைக்கும் பவர் இருக்கு, அவர் கை காட்டுனா எக்ஸ்பிரஸ் ரயிலே நிக்கும்ங்க, அவ்வளவு ஏன்? நம்ம முன்னாள் ரயில்வே மந்திரி லல்லு பிரசாத் யாதவ்க்கு 24 விட்ட பேரான்டி. நான் 2 வது செமஸ்டர் காலேஜ் போனதும் எனக்கு ஒரு கண்டம் வந்தது, சாதாரணமானது இல்லைங்க, கொஞ்சம் பெருசு, எங்க க்ளாஸ் இன்சார்ஜ் மானிக்க வேல் சார் 4 பேர் இருக்க மாதிரி குருப் ஃபார்ம் பன்னிக்க சொன்னார், நானும் எதுக்கும் வசதியா இருக்கட்டும்னு கடைசி பெஞ்ச்ல இருக்க நான், நிவாஸ், கைப்புள்ள, நம்ம லிட்டில் பாண்டுனு ஒரு குருப் ஃபார்ம் பன்னேன். கடைசியாதான் தெரிஞ்சது அவர் குருப் ஃபார்ம் பன்ன சொன்னது செமினார் எடுக்கறதுக்குனு, 4 பேர் சேர்ந்து எடுக்கனுமாம், எந்த டாபிக் வேணும்னாலும் எடுத்துக்கலாமாம், நிவாசும் கைப்புள்ளையும் அப்படி செமினார் எடுத்த

HOW TO TRAIN YOUR DRAGON - திரைவிமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், ரொம்ப நாட்களுக்கு முன்பாகவே என் நண்பன் கண்ணன் இந்த படத்தை பற்றிக் கூறி பார்க்க சொல்லி இருந்தான், ஆனால் எனக்கு தான் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆகஸ்ட் 15 அன்று அரை நாள் கிடைத்ததில் இப்படத்தினை பார்த்தேன்.  அனிமேஷன் படங்கள் என்றாலே எனக்கு தனி பிரியம்தான், சரி வளவள்வென்று இழுக்காமல் படத்திற்கு வருவோம், இந்த படத்தில் வரும் மக்கள் தலையில் கொம்பு உடைய அணியினை அணிந்திருப்பார்கள். இவர்கள் தங்கி இருக்கும் கிராமத்தில் ஒரு பெரும் பிரச்சனை இருக்கிறது. என்னவென்றால் இவர்களது உணவுகளையும் கால் நடைகளையும் கூட்டமாக வரும் டிராகன்கள் கொள்ளையடித்துக் கொண்டு போகின்றன, அக்கிராம மக்களும் அதன் தலைவரும் தங்களால் இயன்றதை செய்கின்றார்கள். வேகமாய் பறந்து வந்து நெருப்பை கக்கி திருடும் டிராகன்களை இவர்களால் தடுக்க முடிவதில்லை. தலைவருக்கு ஒரு மகன், நோஞ்சான், அதிக எடையுள்ள பொருளை தூக்கக் கூட முடியாதவன், ஆனால் எதெச்சையாக அன்று இரவு யாரும் பார்க்க கூட முடியாத வேகத்தில் செல்லும் லைட் ஃபியுரி என்றழைக்கப்படும் டிராகனை தான் கண்டு பிடித்த இயந்திர வில்லில் வீழ்த்தி விடுகிறான

கலைஞரையும் ஜெயலலிதாவையும் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், நாளுக்கு நாள் இணையத்தின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே போகிறது, அரசியல்வாதிகளை எடுத்துக் கொள்ளுங்கள், அவர்களை பற்றிய கேலிகளோ, கேள்விகளோ பத்திரிக்கையில் எழுதிவிட்டால் போதும், அவர்கள் உடனே அந்த பத்திரிக்கை அலுவலுகத்தை அடித்து நொறுக்குவது, எரிப்பது இல்லையேல் மான நஷ்ட வழக்கு போடுவது என அவர்களால் முடிந்த தொல்லையினை குடுப்பார்கள். ஆனால் இணையத்தில் அவர்களால் முடியாது, ஏனெனில் ஒவ்வொரு தகவலும் இணைய தளங்களில் வினாடி வேகத்தில் பரவி கொண்டிருக்கிறது, இதை தடுக்க யாராலும் முடியாது, இப்போதைய செய்தி என்னவென்றால் முதல்வர் ஜெயாலலிதா அவர்கள், முதல் அமைச்சரை தொடர்பு கொள்வதற்கென்று தனியாய் ஒரு இணைய தளம் துவங்கி, மக்களுடன் நேரடியாக தன்னை இணைத்துக் கொள்ள முயன்றுள்ளார், அதன் விவரங்கள். Chief Minister's Special Cell , Secretariat, Chennai - 600 009. Phone Number : 044 - 2567 1764 Fax Number : 044 - 2567 6929 E-Mail : cmcell@tn.gov.in http://cmcell.tn.gov.in/   இன்னொரு பக்கம் கலைஞர் கருனா நிதி டிவிட்டர் மற்றும் ஃபேஸ் புக் வாயிலாக தன்னை இணைத்துக் கொண்டு அவரும் மக்கள

வேஷம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், இன்றைய தேதியில் ஒவ்வொருவரும் தங்களது சொந்த அடையாளங்களை தொலைத்து விட்டு வேலைக்காகவும், சம்பளத்திற்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் நாம் வேடமிட்டு வாழ்கிறோம். அதை விளக்கும் ஒரு சிறிய நகைச்சுவை சிறுகதை. சர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான். இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில் இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது. அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்லாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள். நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார். அவனும் ஒப்புக் கொண்டான். சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான். பிடி தவறிய அவன் சிங்கத்தின் கூண்டருகே விழுந்தான். சிங்கம் அவனை நெருங்கியது. பயந்து போன அவன், ஐயோ! சிங்கம்! என்னைக் காப்பாற்று

பிக் பாக்கெட் ஹோம் மினிஸ்டர் ஆனா?-DARUVU - விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், எனக்கு என்னமோ தெரியலைங்க, தெலுங்கு படம் மேல ஒரு தனி பிரியம் இருக்கு, எதனாலனு தெரியலை, ஒரு வேளை அருந்ததி, மகதீரா, ஹேப்பி டேஸ், நான் ஈ, பிருந்தாவனம்னு ஏகப்பட்ட விதமா படம் வர்ரதாலோயோ என்னவோ போங்க, சரி இன்னைக்கு நாம பார்க்க போற படம் 'தருவு'. தெலுங்கு சிறுத்தை (விக்ரமார்குடு) பார்த்ததுல இருந்தே ரவி தேஜாவ எனக்கு பிடிக்கும். அந்த மனுசன் படம் எதுவும் அதிகம் சீரியஸ் ஆ இல்லாம காமெடிய மையமா வச்சே எடுப்பாங்க, அதை நம்பித்தான் எல்லா படமும் பார்க்கறேன். நம்ம வல்லத்தான் பதிவர் எழுதுன விமர்சனத்தை பார்த்துட்டு இந்த படம் பார்த்தேன். திரும்பவும் எமலோகத்தை சீனுக்குள்ள கொண்டு வர்ர கான்செப்ட், படம் ஆரம்பத்திலேயே வயசானதால தன் மகன் பிரபுக்கு எமன் பட்டம் குடுக்கற சீனியர் எமன் நம்ம பழைய '"எமனுக்கு எமன், அதிசிய பிறவி, எமதொங்கா " படக்கதையைலாம் சொல்லி எச்சரிக்கை பன்னிட்டுதான் போறார். ஆனா சித்ரகுப்தன் வேணும்னே லீவ் கிடைக்காத காண்டுல எமனை மாட்டி விடனும்னு திட்டம் போட்டு ரவி தேஜாவ சீக்கிரம் சாகடிக்க முடிவு பன்றார். நம்ம ரவிதேஜா யார்னா ராஜீனு சென்ன