சாரல் காலம் 2

சாரல் காலம்

#0 / #1 / #2 / #3 / #4

========================================================
கனவு கண்டதையெல்லாம் காதலியிடம் மட்டும் தான் கூறுப் போவதாய் ஹரி இருக்கையில் அது என்ன கருமமா இருந்தா நமக்கென்ன? அடுத்து என்ன நடக்க போகுதுனு பார்ப்போம், ஆனா ஒன்னு தெரிஞ்சுக்கங்க, ஹரி ஏதோ முதல் முதலா ஒரு பொன்னை பார்த்து காதல் வயப்பட்டு கற்பனைக்கு போய்ட்டதா நினைக்க வேண்டாம்.

ஏதாவது கொலை கேஸ்ல தப்பா அவனை பிடிச்சு போய் போலிஸ் ஸ்டேசன்ல சட்டைய கழட்டி உட்கார வச்சிங்கன்னா கூட அங்க இருக்க ஏதாவது ஒரு லேடிய ஒரே ஒரு தடவை பார்த்துட்டு கண்ணை மூடிட்டு கனவுக்கு போயிருவான்.

"ஹலோ"

"ஹலோ"

"எனக்கு இளையராஜா பாட்டு பிடிக்கும்"

"எனக்கும் தான்"

"எனக்கு கௌதம் மேனன் படம்னா ரொம்ப பிடிக்கும்"

"எனக்கும் தான்"

"எனக்கு உங்களை பிடிச்சுருக்கு"

"எனக்கும் தான்"

தம்தன தம்தன தம்தன தாளம் வரும் புது ராகம் வரும்....

பாட்டு முடியறப்ப இவன் எந்த பொன்னை நினைச்சு கனவு கண்டானோ அது ஃப்ரேம்லயே இருக்காது, வேற யாருக்காவது கால்ஸிட் கொடுத்துருக்கும். இவனோட இந்த கனவு, கற்பனை, சாங் லாம் யாருக்கும் தெரியாது, நீங்களும் யார்கிட்டயும் சொல்லிடாதிங்க, கெத் போயிரும்.

இந்த பொன்னையும் அப்படித்தான் ஏதாவது ஒரு ஆத்தங்கரையோரமா கூட்டி போய் டூயட் பாடிட்டு இருப்பான், ஆனா இதோட முடிஞ்சுருக்கும், அந்த பொன்னும் இவனும் பேசிக்காம இருந்துருந்தா?

நடுவுல சாப்பிட கேண்டின்ல வண்டி நின்னப்ப, கொஞ்சம் நேரம் கழிச்சுதான் இவன் இறங்குனான், ஹரிக்கு முடிவு எடுக்கறதுக்கு எப்பவுமே லேட் ஆகும், கேண்டின்குள்ள போனப்ப செம கூட்டம், ஒரு டேபிள் காலி ஆகற மாதிரி தெரிஞ்சது, போய் பக்கத்துல நின்னான். அந்த பொன்னும் வந்து நின்னது, இட நெருக்கடினால ஏதோ ஒன்னா நிக்கற மாதிரி.

"பஸ் ஸ்டாண்ட்ல இத்தனை பேர் இருக்காங்க, எதுக்காக அவ சரியா என்கிட்ட வந்து அடுத்த பஸ் எப்பனு விசாரிக்கனும்?"

"எதுக்காக அவ சரியா என்கிட்ட வந்து 100க்கு சேஞ்ச் இருக்கானு கேட்கனும்?"னு சப்பை விசயத்துக்கெல்லாம் ஏதோ இவன்கிட்ட வந்து "I LOVE YOU" சொன்ன மாதிரி ஃபீல் பன்னுவான், இந்த பொன்னு கூட ஒரே டேபிள் ல உட்கார்ந்து வேற சாப்பிடறான். கேட்கவா வேணும்.

ஏதோ மாமனார் வீட்டு விருந்துக்கு வந்த தோரணை தான், சுத்தி நடக்கறத கண்டுக்கவே இல்லை. சாப்பிட்டு முடிக்கவும் சப்ளையர் வரவும் "போதும் பில் கொண்டு வாங்க"னு அந்த பொன்னு சொன்னது.

இவனும் "ஆமா, பில் கொண்டு வாங்க"னு சொன்னான்.

போய் கைக்கழுவிட்டு வந்து பார்த்தா பில் கொடுத்துட்டு அந்த பொன்னு போயிருச்சு, இவன் விசாரிச்சப்பதான் 2 பேருக்கும் சேர்த்து ஒரே பில்லா வந்தத அந்த பொன்னு கொடுத்துட்டு போனது தெரிஞ்சது. சந்தோஸமா சப்ளையர்க்கு 50 ரூபாய் டிப்ஸ் கொடுத்துட்டு பஸ் ஏறுறதுக்கு முன்னே அந்த பொன்னை மடக்கி கேட்டான்.

"ஹலோ, என் பங்கு"

"என்ன?"

"இல்லை 2 பேருக்கும் சேர்த்து நீங்க பில் கொடுத்திட்டிங்க"

"ஓ, இருக்கட்டும் பராவாயில்லை"

அந்த பொன்னு போய் உட்கார்ந்துருச்சு, இவன் கிட்ட பேச பிடிக்காம கூட அவ போயிருக்கலாம், அது இப்ப மேட்டர் இல்லை, இவன்கிட்ட 4 வார்த்தை பேசிருச்சு.



"ஆசை ஒரு புல்வெளி, அதில் ஆண் பெண் இரு பனித்துளி"

ஒரு பாட்டுதான் என் காதுல விழுந்துச்சு, இவன் தஞ்சாவூர் வர்ர வரைக்கும் என்னென்ன பாட்டு பாடுனான்லாம் எனக்கு தெரியாது. அதே நேரத்துல தஞ்சாவூர் பஸ் ஸ்டான்ட்ல இவனுக்காக ஒருத்தன் மனசுக்குள்ள அசிங்க அசிங்கமா திட்டிகிட்டு இவன் செல்லுக்கு தொடர்ந்து கால் அடிச்சுகிட்டு இருந்தான். முதல் கால் வரப்பவே ஹரி சைலண்ட் ல போட்டுட்டான்.

ஹரி மனசுல இப்ப இருக்க கேள்வி....

அடுத்த பாட்டு?


----------------------------------------------------------------------------------------------தொடரும்------



Comments

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்

கலாய்ச்சுட்டாராமாம்...