Posts

Showing posts from April, 2013

சாரல் காலம் 14

Image
சாரல் காலம் - முந்தின பாகங்கள் #0 / #1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9 / #10 / #11 / #12 / #13 / #14 / !5 ----------------------------------------------------------------------------------------------------------------- பெண்கள் அனைவரும் தயாராகி வெளிப்புறம் வந்தனர், எவ்வளவு மோசமான குணமுடைய பெண்ணையும் நமது பசங்களால் புடவை கட்டி கொண்டு வரும் பொழுது ரசிக்காமல் இருக்க முடியவில்லை, அதுவும் கன்னனால் வாயை  மூடிக் கொண்டு இருக்க முடியவில்லை.   கன்னன் "அம்மாடி, டேய் இதெல்லாம் நம்ம காலேஜ் பொன்னுங்களாடா?" மாதேஸ் "உனக்கெதுக்கு அந்த சந்தேகம்?" கன்னன் "அழகா இருக்காங்களே அதான் என் கண்ணுல எவளுமே ஒரு நாள் கூட பட்டதில்லையே" மாதேஸ் "டேய் கன்னா, 9 மணி காலேஜ்க்கு 9.30க்கு வர வேண்டியது, எல்லோருக்கும் 5 மணிக்கு காலேஜ் முடியுதுனா கடைசி பீரியட் கட் அடிச்சுட்டு 4 மணிக்கே ஓடுனா எப்படிடா பார்க்க முடியும்?" கன்னன் "டேய் நீங்களும் தான்டா என் கூட வர்ரீங்க போறிங்க, உங்க கண்ணுல மட்டும் எப்படி சிக்குது?" மாதேஸ் "நாங்க அத

THE ACCIDENTAL HUSBAND - விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், அவ்வபோது வரும் படங்களை பார்த்தாலும் எனது எப்போதைய விருப்பம் ரொமென்டிக் காமெடி வகை படங்கள் தான், அந்த வகையில் ஒரு படம் தான் நாம் இன்று பார்க்கப் பாவது, THE ACCIDENTAL HUSBAND. படத்தலைப்பிலேயே கதையை யூகிக்கலாம், எதிர்பாராத விதமாய் ஒருவன் ஒரு பெண்ணுக்கு கணவனானால் என்ன ஆகும் என்பது? ஆனால் படத்தில் எதிர்பாராமல் நடப்பது இல்லை, சரி ஆரம்பத்தில் இருந்து பார்ப்போம். நமது நண்பர்களில் எல்லாம் கண்டிப்பாக ஒருவன் இருப்பான்/ள், தனக்கு அனுபவமே இல்லை என்றாலும் நாம் செய்யும் விசயங்களை பற்றி நன்கு தெரிந்தது போல் அறிவுரை சொல்பவர்கள்.   அது போல் லவ் டாக்டர் என கூறிக்கொண்டு ரேடியோவில் நிகழ்ச்சி நடத்துபவர்தான் கதா நாயகி, அவருக்கு வேலையே, யாராவது கஷ்டபட்டு காதலிக்க வைத்திருக்கும் பெண்ணிடம் உணர்வுகளை விளக்குகிறேன் பேர்வழி என்றி 90 % குழப்பி, இருவரையும் பிரிப்பதுதான். இதனால் கல்யாணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தன் காதலியை இழந்தவர்தான் கதா நாயகன், ஒரு தீயனைப்பு வீரர், தன் காதல் தோல்விக்கு காரணமானவள் மீது கோபமாய் இருக்கிறார், அவருக்கு பக்கத்தில் குடியிருக்கும் ஒரு இந்

CATCH ME IF YOU CAN - விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், முகம் பார்த்து பழகும் என் நண்பர்கள் பலருக்கு மற்ற மொழி படங்கள் பார்க்கும் பழக்கம் அறவே இல்லை, எப்போதாவது விக்கிப்பீடியாவின் துணை கொண்டும், சகப் பதிவர்களின் விமர்சனத்தினை கண்டும் பல படங்களை பற்றி தெரிந்து கொண்டு தரவிறக்கம் செய்து பார்ப்பேன். அப்படி என் உடன்பிறப்பு மூலம் அறிமுகம் கிடைத்து சமிபத்தில் நான் பார்த்த திரைப்படம் தான் "CATCH ME IF YOU CAN", பலர் பார்த்திருக்க கூடும், ஏனேனில் படம் வெளியானது 2002ல், சரி படத்திற்கு வருவோம். படத்தின் நாயகனை உண்மையில் முதலில் பார்க்கும் பொழுது எனக்கு அடையாளம் தெரியவில்லை, பின்னர் எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே என்று தேடி பார்க்கும் போதுதான் கண்டு கொண்டேன், அட நம்ம டைட்டானிக் ஹீரோ ஜேக் இல்லைன்னு, படம் ஆரம்பமே கொஞ்சம் வித்தியாசமா, எதுவுமே புரியாமா யாரோ யாரையோ ஜெயில்ல போய் பார்க்க போறாங்க, என்னதான் சப்டைட்டில்ல வசனம் புரிஞ்சாலும் கதை புரியறதுக்கு 15 நிமிடம் ஆகிடுது. ஃப்ராங்க், அதிபுத்திசாலியான 16 வயசு பையன், நல்லா வாழ்ந்துட்டு இருந்த அவங்க குடும்பம் பொருளாதார ரீதியா பாதிக்கப் படுது, வீடு மாறுறாங்க, இரு

சாரல் காலம் 13

Image
சாரல் காலம் - முந்தின பாகங்கள் #0 / #1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9 / #10 / #11 / #12 / 13 / #14 / !5 ----------------------------------------------------------------------------------------------------------------- பெண்களின் நிலையே வேறு, தீபாவிற்கு காதல். அதனால் அவள் உறங்கவில்லை. காயத்ரி சிறு சலனம் ஏற்பட்டாலோ, வெளிச்சம் இருந்தாலோ அவ்வளவு விரைவில் உறக்கம் வருவதில்லை. (படத்திற்கும் கதைக்கும் சம்பந்தமில்லை, ஒரு அழகியலுக்காக மட்டும் சேர்க்கப் பட்டுள்ளது) கல்யாண வீடு. ஆதலால் சிறுசிறு சப்தங்கள் வந்து கொண்டே இருந்ததால் காயத்ரியும் உறங்கவில்லை. படுத்து கொண்டே இருந்தவள் ஏதோ ஒரு ஞாபகத்தில் எழுந்து உட்கார்ந்தாள். விழித்துக் கொண்டே படுத்திருந்த தீபாவுக்கு யாரிடமாவது பேச வேண்டும் போல இருந்தது. தீபா "ஏன்டி, தூங்கலையா?" காயத்ரி "இல்லை, எனக்கு புது இடத்துல சீக்கிரம் தூக்கம் வராது, நீ தூங்கலை?" தீபா " இல்லை, எனக்கும் உன்னை மாதிரிதான் புது இடத்துல தூக்கம் வராது" காயத்ரி "வரலனாலும் எப்படியாவது தூங்கியே ஆகனும்

சாரல் காலம் 12

Image
சாரல் காலம் - முந்தின பாகங்கள் #0 / #1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9 / #10 / #11 / #12 / 13 / #14 / !5 ----------------------------------------------------------------------------------------------------------------- ஹரியின் முகத்தில் அந்த இருளிலும் ஒளி வீசும் அளவுக்கு உற்சாகம் பொங்கியது. தீபாவிற்கு சொல்லவே வேண்டாம், தான் காதலிக்க துவங்கியது தெரிந்ததில் இருந்தே பயங்கர உற்சாகத்தில் தான் இருந்தாள். நாம் நினைக்கும் நேரத்தில் நம்மை காதலிப்பவர்கள் எதிரில் தோன்றினால் போதாதா? வேறு என்ன வேண்டும் இந்த உலகில் நமக்கு? சூர்யாவை பார்த்ததும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போன தீபா, காயத்ரி அருகில் இருப்பதை உணர்ந்ததும் தன்னை கட்டுப்படுத்தி கொண்டாள். காயத்ரிக்கு ஹரியை பார்த்ததும் இந்நேரத்திற்கு கூட சைட் அடிப்பதற்கென்று வந்து நின்று கொண்டிருக்கிறானா என்று தோன்றியது. காயத்ரி தீபாவை அழைத்துக் கொண்டு சென்று படுத்துக் கொண்டாள். தீபாவிடம் பேச இப்போது எந்த வார்த்தையும் இல்லை, தப்பித் தவறி வாயை திறந்தால் 'I LOVE SURYA' என்றுதான் வரும். நம் மனதில் எந

404 Error not found - திரை விமர்சனம்

Image
அனபர்களுக்கு வணக்கம், சில படங்களை பார்த்ததும் உடனே நம்மளை ஒத்த ரசனை உடையவங்களை தொடர்பு கொண்டு நாம ரசிச்சு பார்த்த படத்தை பார்க்க சொல்லுவோம், அந்த மாதிரி என்னை ரொம்ப பாதிச்ச படங்கள் கம்மிதான், அதுல இந்த படம் கண்டிப்பா ஒன்னு. இந்த படத்தோட பேரே வித்தியாசமா இருக்கு, ஒரு மருத்துவ கல்லூரி, ஹாஸ்டல், இராக்கிங் பிரச்சனை, முதல்ல சாதாரணமா ஆரம்பிக்கற திரைக்கதை, ஆனா அதுலயும் வித்தியாசமான கேமிரா கோணங்கள், நீங்க எதிர்பார்க்கற மாதிரி ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன்லாம் யாரும் கிடையாது. ஒரு நல்லா படிக்கற பையன் அபிமன்யு, அவனை ஊக்குவிக்கற புரொஃபசர், அவங்க அழகான மனைவி அவங்களும் புரோஃபசர் தான், தினமும் இராத்திரில முதல் வருசத்து பசங்களை இராக்கிங் பன்ற சீனியர் கும்பல், அவங்களை எதிர்க்கற நல்ல பையனை டார்ச்சர் பன்றதால, மத்த பசங்க தன்னால பாதிக்கப்பட கூடாதுனு வேற ரூம்க்கு போக நினைக்கறான் அபிமன்யு. அவன் போகனும்னு நினைக்கற ரூம் நம்பர் 404, அதுதான் காலியா இருக்கு, ஆனா 3 வருசத்துக்கு முன்னாடி ஒரு ஸ்டூடன்ட் கௌரவ் அதுல தூக்கு போட்டு தற்கொலை பண்ணிகிட்டதால அதுல பேய் நடமாட்டம் இருக்குனு பூட்டியே

உதயம் NH4 விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், ஒரு படம் பிடிக்கலைன்னா கண்டிப்பா நான் விமர்சனம் எழுத மாட்டேன். எனக்கு அந்த படத்துல பிடிச்ச விஷயங்களைத்தான் விமர்சனங்கற பேர்ல எழுதுவேன். இன்னைக்கு நாம பார்க்க போற படம் உதயம் NH4. தியேட்டர் மேச்சேரி KS தான், 9 மணிக்கு முடிவு பண்ணி, சாப்பிட்டு பொறுமையா டீ சர்ட், லுங்கியோட வீட்லய தண்ணிர் பாட்டில் எடுத்துகிட்டு நடந்து நண்பனோட போனேன், டிக்கெட் 40 ரூபாய் தான், என்னா கரன்ட் போனா ஜெனரேட்டர்க்கு மாத்தறப்ப 2 நிமிஷம் காத்திருக்கனும். உள்ளே போறப்பவே சித்தார்த் அ போஸ்டர்ல பார்த்தேன், அப்படி எதை பார்த்து சமந்தா மயங்கி இருக்கும்? படம் ஆரம்பிச்சதும் உதய நிதி ஸ்டாலின் பேர் போட்டதுக்குலாம் 4 உடன் பிறப்புகள் கைத்தட்டுனாங்க, வெற்றி மாறன் பேருக்கு நான் ஒருத்தன் தான் கை தட்டுனேன். படம் ஆரம்பிக்கும் போதே பொன்னை தூக்கறாங்க, நாடோடிகள் போலனு பார்த்தா ஏதோ மங்கத்தா ரேஞ்சுக்கு ஒழுங்கா கேட்காத மாதிரி ப்ளான் போட்டாங்க, சரி ஏதாவது புதுசா இருக்கும்னு பார்த்தேன், பழச கழுவி சுத்தமா கொடுத்துருக்காங்க. கடைசி எக்சாம் முடிஞ்சதும் ஹீரோயின் அ பாத்ரூம் ஜன்னல் வழியா கடத்தறத யூகி

Delhi Belly விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், என்னடா இத்தனை நாள் இல்லாம இன்னைக்கு இந்த படத்துக்கு விமர்சனம் போட்டுருக்கேன்னு யோசிக்கலாம், நானும் சேட்டை படம் வந்ததும் பார்க்கலாம்னு தான் இருந்தேன், நம்ம சகப் பதிவர்கள்லாம் சேர்ந்து படத்தை கழுவி ஊத்துனதுக்கு அப்புறம் எதுக்கு செலவு பன்னி பார்க்கனும்னு தோணிருச்சு, ஆனா சேட்டைய ஓட்டுன எல்லாரும் அதோட ஒரிஜினலான இந்த படத்தை ரொம்ப புகழ்ந்துருந்தாங்க, ஏற்கனவே வாங்கி வச்சுருந்த டிவிடி ய எடுத்து போட்டு இன்னைக்குத்தான் பார்த்தேன். அதான். படம் உண்மையிலேயே செம என்டர்டெய்னர், ஜெய்சங்கர் காலத்து கதைதான், அதுல வர்ர நாகேஷ், தேங்காய் சீனிவாசன் ரோல்லதான் சந்தானம், பிரேம்ஜிக்கு கொடுத்துருப்பாங்கனு நினைக்கறேன். அது என்னவோ ஷேவ் கூட பன்னாம, அழுக்கு ரூம்ல இருக்க பையனை தேடி வந்து பனக்கார பொன்னு லவ் பன்னுதுனு நிறைய படத்துல காட்டுனாலும் அதுல எனக்கு உடன்பாடு இல்லை. ஏன்னா நான், என் ஃப்ரென்ட்ஸ்லாம் காலகாலமா அப்படித்தான் இருக்கோம், யாரும் திரும்பி கூட பார்க்கறது இல்லையே.   படத்துல 2 ஹீரோயின், வடக்க சென்சார் போர்ட்லாம் இருக்கா? இல்லையானே தெரியலை, பாத்ரூம் வந்தாலாம் கெட்ட வார்

சாரல் காலம் 11

Image
சாரல் காலம் - முந்தின பாகங்கள் #0 / #1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9 / #10 / #11 / #12 / 13 / #14 / !5 ----------------------------------------------------------------------------------------------------------------- ஹரி மனதில் விரைவாக சாப்பிட்டுவிட்டு வந்தால்தான் காயத்ரியை பார்க்க முடியும் என்ற எண்ணம் வந்தது. ஆனால் அதை அவனால் செயல்படுத்த முடியவில்லை. காரணம் உடன் இருக்கும் நண்பர்கள் அவனிடம் பேச்சு கொடுத்து கொண்டே இருந்தார்கள். அதுவும் இல்லாமல் எந்த சூழ்நிலையிலும் ஹரி ஆகட்டும், அவனது நண்பர்கள் ஆகட்டும் அருமையான சாப்பாடு கிடைத்தால் எந்த காரணத்திற்காகவும் விட்டுவிட மாட்டார்கள். அன்பு "டேய் பாலா, இதுவரைக்கும் இந்த கல்யாணத்துல மொத்தமா எத்தனை செலக்ட் பன்னிருக்க?" பாலா "12 இருக்கும், எதுக்கு?" அன்பு "இல்லை, நீயா பார்த்து எனக்கு ஒத்து போற மாதிரி ஒன்ன தள்ளி விடேன்" பாலா "எந்த மாதிரி எதிர்பார்க்கற?" அன்பு "ஓரளவுக்கு பார்க்க நல்லாயிருக்கனும், பேசுனா நல்லா பேசனும் அவ்ளோதான்" பாலா "சரி

சாரல் காலம் 10

Image
சாரல் காலம் - முந்தின பாகங்கள் #0 / #1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9 / #10 ----------------------------------------------------------------------------------------------------------------- ஹரியும் நண்பர்களும் அந்த பெண்களுக்கு கொஞ்சம் தொலைவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ஹரிக்கு தான் காயத்ரியை பார்த்தால் நண்பர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று தெரியும். ஆனால் காயத்ரி ஒருமுறையாவது தன்னை திரும்பி பார்க்க மாட்டாளா என்ற ஏக்கம் அவனையும் மீறி அடிக்கடி பார்க்க வைத்தது. ஹரி அடிக்கடி காயத்ரியை மாதேசும் பாலாவும் கவனித்து கொண்டுதான் இருந்தார்கள். இருவரும் ரகசியமாக பேசிக் கொண்டார்கள். பாலா "டேய் மாப்பிள்ளை, ஹரி என்னடா அந்த பொன்ன அப்படி பார்க்குறான்" மாதேஸ் "எப்படி?" பாலா "2 நாளா சாப்பிடாதவன் பரோட்டா கடையை பார்க்கற மாதிரி, ரொம்ப சைட் அடிக்கறான்டா" மாதேஸ் "எனக்கென்னமோ இதை பார்த்தா சைட் அடிக்கற மாதிரி தெரியலை. அதையும் தாண்டி ஏதோ நடந்துகிட்டு இருக்கு" பாலா "எதை வச்சு சொல்ற?" மாதேஸ் "