சாரல் காலம் 10

சாரல் காலம் - முந்தின பாகங்கள்

#0 / #1 / #2 / #3 / #4 / #5 / #6 /#7 /#8 / #9 / #10

-----------------------------------------------------------------------------------------------------------------
ஹரியும் நண்பர்களும் அந்த பெண்களுக்கு கொஞ்சம் தொலைவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ஹரிக்கு தான் காயத்ரியை பார்த்தால் நண்பர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று தெரியும். ஆனால் காயத்ரி ஒருமுறையாவது தன்னை திரும்பி பார்க்க மாட்டாளா என்ற ஏக்கம் அவனையும் மீறி அடிக்கடி பார்க்க வைத்தது.

ஹரி அடிக்கடி காயத்ரியை மாதேசும் பாலாவும் கவனித்து கொண்டுதான் இருந்தார்கள். இருவரும் ரகசியமாக பேசிக் கொண்டார்கள்.

பாலா "டேய் மாப்பிள்ளை, ஹரி என்னடா அந்த பொன்ன அப்படி பார்க்குறான்"

மாதேஸ் "எப்படி?"

பாலா "2 நாளா சாப்பிடாதவன் பரோட்டா கடையை பார்க்கற மாதிரி, ரொம்ப சைட் அடிக்கறான்டா"

மாதேஸ் "எனக்கென்னமோ இதை பார்த்தா சைட் அடிக்கற மாதிரி தெரியலை. அதையும் தாண்டி ஏதோ நடந்துகிட்டு இருக்கு"

பாலா "எதை வச்சு சொல்ற?"

மாதேஸ் "சாதாரணமா சைட் அடிக்கறவனா இருந்தா அந்த பொண்ண ரசிச்சு வர்ணிச்சு நம்மகிட்ட பேசுவானே, இவன் பார்க்கற பார்வைல ஏதோ திருட்டுதனம் தெரியுது"

பாலா "இந்த விசயம் சூர்யாவுக்கு தெரிஞ்சுருக்கும் தானே?"

மாதேஸ் "சத்தியமா தெரிஞ்சுருக்கும், அதை என்னானு நைட் பஞ்சாயத்துல பேசிக்கலாம்"

ஹரி அடிக்கடி காயத்ரியை அமர்ந்திருக்கும் இடத்தை அடிக்கடி கவனிப்பதை பலரும் கவனித்தனர், அதில் சித்ராவும் ஒருத்தி.

சித்ராவை பற்றி கூற வேண்டுமென்றால் , நல்ல அழகி. ஆனால் அந்த அழகை மற்றவர்கள் ரசிக்க விடாமல் வெறுக்க வைப்பது அவளிடம் உள்ள அழகி என்ற கர்வம்.

அவளை சொல்லியும் குற்றமில்லை. கல்லூரிக்கு வந்த புதிதில் சும்மா இல்லாமல் ஜீனியர் வரட்டும் என்று காத்திருந்த அனைத்து சீனியர் ரோமியோக்களும் இவளிடமே காதலை சொல்லியதால் வந்த வினை.

சித்ரா யாரிடமும் மயங்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் வளர்ந்த கர்வம் அவளிடம் காதலை நெருங்காமல் பார்த்து கொண்டது.

சித்ராவிற்கு ஹரி அடிக்கடி கவனிப்பது தன்னை தான் என்ற எண்ணம் தானாகவே வந்தது. ஒரு யூகத்திற்காக கூட மற்றவர்களை பார்க்கிறாநா என்ற எண்ணம் தோன்றவேயில்லை.

முதல் பந்தியில் சாப்பிட்டவர்கள் அனைவரும் வெளியேற ஆரம்பித்தனர். கன்னனுக்கு அவர்களை பார்க்கும் போது பசி அதிகமாக எடுத்தது.

கன்னன் "டேய் வாங்கடா, சாப்பிட போலாம்"

மாதேஸ் "என்ன அவசரம்?"

கன்னன் "உங்களுக்கெல்லாம் பசிக்கலியா?"

பாலா "கன்னா, கல்யான சாப்பாடு சாப்பிட போறோம்னு 2 வேளை வயித்த காய போட்டுட்டு வந்தா இப்படித்தான் பசிக்கும்"

கன்னன் "மதியம் வழில சாப்பிடலாம்னு சொன்னதுக்கு நீங்கதான்டா வயிறு கெட்டு போயிடும்னு டீ மட்டும் வாங்கி கொடுத்திங்க. இப்ப என்னடா என்னை சொல்றிங்க?"

மாதேஸ் "கன்னா, சொல்றவன் 1000 சொல்லுவான், உனக்கு அறிவு இல்லை? இந்த சின்ன விசயத்துக்கு உன்னால முடிவு பன்ன முடியலையே, நாளைக்கு உனக்குலாம் கல்யாணம் ஆகி?"

கன்னன் "டேய் ஏண்டா, எதுக்கெடுத்தாலும் அதையே இழுக்கறிங்க?"

இவர்கள் பேசுவதை ஹரி கவனிக்கவேயில்லை. ஆனால் அவர்கள் ஏதாவது சொல்லி சிரிக்க ஆரம்பித்தால் இவனும் புரிந்த மாதிரி கூட சேர்ந்து சிரித்தான். ஆனால் இவனின் பார்வை, கவனம், எண்ணம் முழுவதும் காயத்ரியை சுற்றி இருந்தது.

இவன் தனியே அமைதியாக இருந்தால் மாட்டிக் கொள்வான் என்று சூர்யாவும் அவனுடன் சேர்ந்து அவனை போலவே ரியாக்சன் கொடுத்து கொண்டிருந்தான். ஆனால் அவனது நண்பர்கள் இதை கவனியாமல் இல்லை.

தீபாவின் நிலையோ வேறு. இவர்கள் சிரிக்கும் சத்தம் கேட்கும் போதெல்லாம் சூர்யாவை பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகி விடும். ஆனால் வெட்கமும் மற்றவர்கள் பார்த்து விடுவார்களோ என்ற பயமும் அவளை தடுத்தது.

சித்ராவிற்கோ இவர்கள் சிரிப்பது அவளையும் அவள் தோழிகளையும் திரும்பி பார்க்க வைப்பதற்காகத்தான் என தோன்றியது. அதனால் அவர்களின் சிரிப்பு சத்தம் கேட்கும் போதெல்லாம் இவள் எரிச்சலடைந்தாள்.

முதல் பந்தி முடிந்ததை சூர்யா கவனித்து விட்டு ஹரியின் காதருகே சென்று கூறினான்.

"டேய் வா சாப்பிட போகலாம், அந்த பொன்னுங்க போன பின்னாடி போனா நல்லாருக்காது"

ஹரி "சரிடா"

சூர்யா மற்றவர்கள் அனைவரையும் பார்த்து சாப்பிட போலாமென்று அழைத்தான். சரியென்று அனைவரும் கிளம்பும் போது பாலா வனிதாவிடம் சென்று சாப்பிடவில்லையா என விசாரித்து விட்டு மாதேஸ் முறைத்ததை பார்த்து திரும்பி வந்தான்.

இப்படி நடந்ததும் பாலா மற்ற பெண்களை கண்களால் அளவெடுத்ததும் சித்ராவிற்கு எரிச்சலை தந்தது.மனதிற்குள் திட்டி கொண்டே சாப்பிட போனாள்.

மாதேஸ் "டேய் பாலா, ஏண்டா எப்ப பார்த்தாலும் வனிதாவ பிடிச்சுகிட்டு சுத்தற?"

பாலா " நான் ஒன்னும் அவளுக்காக போகலை?"

மாதேஸ் "பின்ன?"

பாலா " கூட இருக்கற பொன்னுங்கள்ள ஏதாவது செட் ஆகுமானு பார்க்க போனேன்"

மாதேஸ் "எதுக்கு?"

பாலா "காதலிக்கத்தான்"

கன்னன் "அப்படியே எனக்கு ஒன்னுடா"

பாலா "பிஞ்சிரும்டா"

மாதேஸ் "சரி விடுறா, எதை செலக்ட் பன்ன?"

பாலா "எதையும் தனியா பிரிச்சு பார்க்க முடியலை மச்சி"

மாதேஸ் "அதனால?"

பாலா "ஆறையுமே லிஸ்ட்ல சேர்த்துகிட்டேன்"

மாதேஸ் "ஆறுனா வனிதாவுமா?"

பாலா "ஆமா, அவளுக்கென்ன குறைச்சல்?"

மாதேஸ் "ஏன்டா, அடுத்தவன் ஆளுக்கு ஆசைப்படற?"

அன்பு "டேய் விடுங்கடா, சாப்பிட வந்துட்டு எதைஎதையோ பேசிகிட்டு?"

ஹரி காயத்ரி வருகிறாளா என்று அடிக்கடி கவனித்து கொண்டுதான் உள்ளே வந்தான், அவனுடைய நல்ல நேரம் சித்ரா மூலம் வேலை செய்தது.

ஹரி எதிர்பார்த்தது என்னவோ காயத்ரிக்கு நேர் எதிரில் அமர்ந்து அவளை பார்த்துக்கொண்டே சாப்பிட வேண்டும் என்பதுதான். ஆனால் அதிர்ஷ்டம் அவனை ஏமாற்றி விட்டது. இவர்கள் அமர்ந்தவுடன் பக்கத்தில் ஒரு தம்பதிகள் அமர்ந்தனர். அவர்களை தொடர்ந்தார் போல் பெண்கள் அமர்ந்தனர்.

கொடுமை என்னவென்றால் ஹரி இந்த கடைசி என்றால் காயத்ரி அந்த கடைசி. தீபாவிற்கு அதிர்ஷ்டம் அடித்திருந்தது.

தீபா, தம்பதிகள், சூர்யா என்ற வரிசையின் படி அருகருகேதான் அமர்ந்திருந்தார்கள். அதனால் தீபாவினால் சூர்யாவின் குரலையும் சிரிப்பையும் நன்கு கேட்க முடிந்தது. அவ்வப்போது எட்டி அவனது முகத்தை அரை வினாடி பார்ப்பாள்.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRd7D9ar82wZzF5uFqqwGIzJoTlUToXhFksG5kQ4yOn8pf1UvMImzhjtNphWmevLWZVazFGMOuQHiPqK1m6nBOPx0efBe-sVgn6fEXM5hJDu3cBKDwzLJdBZTaoD6KDbAaylWukZa0K99q/s400/Rowdila+Charitra+Movie+stills+%25285%2529.JPG

ஏனென்றால் தீபா எட்டி பார்த்தால், வனிதாவை பார்ப்பதற்காக குனிந்த படி எட்டி எட்டி பார்த்து கொண்டிருக்கும் பாலாவின் கண்கள் அவளை தடுத்தது.
பாலாவிற்கு ஒருவேளை தீபா தன்னைத்தான் பார்க்கிறாளோ என்ற எண்ணம் வந்தது.

----------------------------------------------------------------------------------தொடரும்------------



Comments

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்

கலாய்ச்சுட்டாராமாம்...