Posts

Showing posts from 2014

ஏண்டா டகால்டி-CTS SEN

Image
அன்பர்களுக்கு வணக்கம், கல்லூரி நண்பர்கள் பற்றி எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, இன்று நண்பனின் பிறந்தநாள், அவனை பற்றி பேச மனம் விழைகிறது, அவனுக்கு அருமையான தமிழ் பெயர் "செந்தமிழ்", பொதுவாக ஒவ்வொரு மனிதனையும் பிடித்தவர்கள் இருப்பது போல் பிடிக்காதவர்களும் இருப்பார்கள், எனக்கு தெரிந்து என்னுடன் கல்லூரியில் படித்த அனைவருக்கும் இவனை பிடிக்கும்.செந்தமிழை நினைத்தாலே மனம் குதுகலமடையும், ஒல்லியான உருவம், சிரித்த களையான முகம், அப்பப்போ தாடி வைப்பாறு, முக்கியமானது இவனுடைய உடல்மொழி, இரண்டு தோள்பட்டையையும் தூக்கி ஆட்டி "ஏண்டா டாய், டகால்டி" என்றால் அதை நினைத்து நான் இரண்டு நாள் சிரித்து கொண்டிருப்பேன். அவனது தந்தை  மத்திய வங்கி வேலையில் இருந்ததால், அவனது குடும்பம் வட இந்தியாவில் இருக்க, இவன் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தான். இவன் பெயர் முதலாம் ஆண்டு எல்லாரிடமும் பிரபலமானதே சுவாரசியமான முறையில்தான், முதல் செமஸ்டர் தேர்வு எழுதி விட்டு மெஸ்ஸுக்கு சாப்பிட வந்த எல்லோரிடமும் "மச்சி, நீ பாஸ் ஆகிருவியா? எனக்கு போயிரும்னு பயமா இருக்குடா" என ரொம்ப அப்பாவாக முகத்த

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், அது என்னமோ தெரியலை, மத்த விஷயங்களை விட சினிமா எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு விஷயம், சினிமாக்கு அப்புறம்தான் நம்ம வாழ்க்கைல தொலைக்காட்சி வந்தது, சினிமா,அன்றாட செய்திகளைதான் முக்கிய கருவா வச்சு எல்லா சேனல்லும் செயல்பட்டுகிட்டு வருது, அதுலயும் முக்கியமா சினிமால என்ன நடக்குதுங்கறதை மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கறதைத்தான் அவங்க முதல் கடைமையா செய்யறாங்க, எதுக்கு இதெல்லாம் சொல்றன்னா அப்படி தமிழ் மக்கள்கிட்ட முக்கியமா இணைஞ்சுருக்க சினிமால ஜெயிக்கறதுக்காக ஒவ்வொருத்தரும் வித்தியாசமா ஏதாவது ஒன்னு செஞ்சுகிட்டே இருக்காங்க, வித்தியாசமா செஞ்சு ஜெயிச்சவங்கள்ல முக்கியமான ஒருத்தர் "பார்த்திபன்" பாரதிராஜா-பாக்யராஜ்-பார்த்திபன் - கரு.பழனியப்பன் இந்த வரிசை எனக்கு பிடிச்ச ஒன்னு, தன்னோட 25வது படத்துல நடிக்காம முதல்முறையா தனி இயக்குனரா மட்டும் செய்ல்பட்டு பார்த்திபன் ஜெயிச்சுருக்காருன்னுதான் சொல்லனும். அவருக்கு யார் சொன்னாங்கன்ன்னு தெரியலை, இப்ப படம் பார்க்க வர மக்கள் என்ன எதிர்பார்க்கறாங்கன்னு ஓரளவுக்கு தெரிஞ்சுக்கு. படத்துக்கு வர ஜனங்க எதிர்பார்க்கறது ரொம்ப பெரிய கதைலாம

சதுரங்க வேட்டை - உலக சினிமா

Image
அன்பர்களுக்கு வணக்கம், உங்களுக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து கொஞ்சம் தெளிவா சொல்லனும்னா உங்க கையில பணம் வர ஆரம்பிச்சதுக்கு அப்புறம் யார்கிட்டயாவது பணத்தை ஏமாந்து இருக்கிங்களா? கடன் கொடுத்து ஏமாந்ததை கேட்கலைங்க, குறுக்கு வழில சம்பாதிக்க ஆசைப்பட்டு ஏமாந்து இருக்கிங்களா? 1 வச்சா 2 2 வச்சா 4 5 வச்சா 10 10 வச்சா 20 னு கூவி கூவி கூப்பிடற லங்கர் கட்டை உருட்டறவன்கிட்ட பணத்தை விட்டு இருக்கிங்களா?  வெறும் 2 பேரை நமக்கு கீழ் சேர்த்து விட்டா போதும், அதுக்கு அப்புறம் வேலைக்கே போகாம பணம் சம்பாதிக்கலாம்னு சொல்ற, உங்களை சேர சொல்லி டார்ச்சர் பண்றவங்களை பார்த்துருக்கிங்களா? உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது மன்னுளி பாம்பு வியாபாரம் பண்ணி கோடி கோடியா சம்பாதிக்கலாம்னு பைத்தியகாரனா அலைஞ்சத பார்த்துருக்கிங்களா? கோபுர கலசத்துல இடி இறங்குனா அது இரிடியமா மாறிடும், அப்படி மாறுன கலசத்தை கோடி கணக்குல வாங்க ஆள் இருக்குனு நம்பற ஆளா நீங்க? உங்களோட, நம்மளோட முட்டாள்தனத்தை வெளிப்படையா காட்டற படம் தான் இந்த "சதுரங்க வேட்டை" "ஒருத்தனை ஏமாத்தனும்னா அவன்கிட்ட கருனைய எதிர்

வடகறி - திரை விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், எனக்கு ரொம்ப புதுசா கதை இருக்கனும்னு அவசியம் இல்லை, நான் எங்கேயும் லாஜிக்லாம் பார்க்க மாட்டேன், பொழுது போக்குக்கு மட்டும்தான் படத்துக்கு போறேன்னு சொல்றவங்களுக்கான படம் தான் இந்த "வடகறி" படத்தோட டைட்டில்லயே ஆப்பிள் சிம்பள் வரப்பவே புரிஞ்சுக்கனும், இந்த படத்துக்கும் ஆப்பிள் iphone க்கும் முக்கியமான சம்பந்தம் இருக்குனு, ஹீரோவ முதல்ல காட்டும் போதே போன்லருந்துதான் ஆரம்பிக்கறாங்க, அவர் வச்சுருக்க போன்ல பேசுனா வாக்கி டாக்கி மாதிரி சுத்தி இருக்க எல்லாருக்கும் கேட்கும், இதுல போன் பண்ணி ஜாக்கி வேலை பார்த்து கோர்த்து விடற நண்பன் வேற....   ஒவ்வொரு இடத்துலயும் அசிங்கப்பட்டு, புதுசா போன் வாங்கலாம்னு 2000 ரூபாய் எடுத்துட்டு கிளம்பறார், 500 ரூபாய் ட்ரீட்டுக்கு ஒதுக்கிட்டு 1500 ரூபாய்க்கு கொரியன் செட் வாங்கறார், இந்த சுச்சுவேஷனுக்குதான் நம்ம தலைவிய கொண்டு வந்து இறக்கியிருக்கான் நம்ம இயக்குனர் ஆனா சைனா செட் வாங்கனதுக்கு சன்னி லியோன் கூட சாங்லாம் ரொம்ப ஓவர், அதுக்கப்புறம் தான் ஹீரோ உச்ச கட்ட அவமானத்தைலாம் வாழ்க்கைல அனுபவிக்கறார், குழந்தைய கூட அவர

யாமிருக்க பயமே - Tamil Horror Comedy Film

Image
அன்பர்களுக்கு வணக்கம், தமிழில் முதல் முறையாக வந்திருக்கும் Horror-Comedy படம், தமிழ் சினிமாவில் புதிய வகை படங்களை ரசிப்பவர்களுக்கு கண்டிப்பாக இப்படம் பிடிக்கும். படத்திற்குள் செல்வோம்.    கிருஷ்னா, ரூபா மஞ்சரி காதலர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள், ஊர் முழுக்க ஏமாற்றிவிட்டு தன் தந்தையிடம் இருந்து வந்திருக்கும் பாரம்பரிய சொத்தை பார்க்க கிளம்பி சென்றவர்களுக்கு பாழடைந்த பங்களா பலத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் ஊர் முழுக்க கடன்காரர்கள் தொல்லை, தப்பிக்க வேறு வழியில்லாமல் பெரிதாக ஏமாற்றி கிடைக்கும் பணத்தை வைத்து அந்த பங்களாவை சீராக்குகிறார்கள். இதற்கு உதவியாய் கருனாகரன் (அருமை நாயகம்-சூது கவ்வும்), அவனது தங்கை ஓவியா, எல்லாரும் சேர்ந்து குளுகுளு ரெஸ்டாரண்ட்டினை ஆரம்பிக்கிறார்கள், அதன்பின் தான் திகில் ஆரம்பிக்கிறது, அங்கே தங்க வருகின்ற ஒவ்வொருவராய் இறக்கிறார்கள். எதற்காக இறக்கிறார்கள் என்று எல்லோருக்கும் குழப்பம், எல்லோரும் சரத்(கருனாகரன்) தினை சந்தேகிக்கின்றனர், அதற்கேற்றார் போல் எல்லோரும் சரத்தை பார்த்தவுடன் சொல்வது "உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே