Posts

Showing posts from August, 2014

ஏண்டா டகால்டி-CTS SEN

Image
அன்பர்களுக்கு வணக்கம், கல்லூரி நண்பர்கள் பற்றி எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, இன்று நண்பனின் பிறந்தநாள், அவனை பற்றி பேச மனம் விழைகிறது, அவனுக்கு அருமையான தமிழ் பெயர் "செந்தமிழ்", பொதுவாக ஒவ்வொரு மனிதனையும் பிடித்தவர்கள் இருப்பது போல் பிடிக்காதவர்களும் இருப்பார்கள், எனக்கு தெரிந்து என்னுடன் கல்லூரியில் படித்த அனைவருக்கும் இவனை பிடிக்கும்.செந்தமிழை நினைத்தாலே மனம் குதுகலமடையும், ஒல்லியான உருவம், சிரித்த களையான முகம், அப்பப்போ தாடி வைப்பாறு, முக்கியமானது இவனுடைய உடல்மொழி, இரண்டு தோள்பட்டையையும் தூக்கி ஆட்டி "ஏண்டா டாய், டகால்டி" என்றால் அதை நினைத்து நான் இரண்டு நாள் சிரித்து கொண்டிருப்பேன். அவனது தந்தை  மத்திய வங்கி வேலையில் இருந்ததால், அவனது குடும்பம் வட இந்தியாவில் இருக்க, இவன் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தான். இவன் பெயர் முதலாம் ஆண்டு எல்லாரிடமும் பிரபலமானதே சுவாரசியமான முறையில்தான், முதல் செமஸ்டர் தேர்வு எழுதி விட்டு மெஸ்ஸுக்கு சாப்பிட வந்த எல்லோரிடமும் "மச்சி, நீ பாஸ் ஆகிருவியா? எனக்கு போயிரும்னு பயமா இருக்குடா" என ரொம்ப அப்பாவாக முகத்த

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், அது என்னமோ தெரியலை, மத்த விஷயங்களை விட சினிமா எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு விஷயம், சினிமாக்கு அப்புறம்தான் நம்ம வாழ்க்கைல தொலைக்காட்சி வந்தது, சினிமா,அன்றாட செய்திகளைதான் முக்கிய கருவா வச்சு எல்லா சேனல்லும் செயல்பட்டுகிட்டு வருது, அதுலயும் முக்கியமா சினிமால என்ன நடக்குதுங்கறதை மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கறதைத்தான் அவங்க முதல் கடைமையா செய்யறாங்க, எதுக்கு இதெல்லாம் சொல்றன்னா அப்படி தமிழ் மக்கள்கிட்ட முக்கியமா இணைஞ்சுருக்க சினிமால ஜெயிக்கறதுக்காக ஒவ்வொருத்தரும் வித்தியாசமா ஏதாவது ஒன்னு செஞ்சுகிட்டே இருக்காங்க, வித்தியாசமா செஞ்சு ஜெயிச்சவங்கள்ல முக்கியமான ஒருத்தர் "பார்த்திபன்" பாரதிராஜா-பாக்யராஜ்-பார்த்திபன் - கரு.பழனியப்பன் இந்த வரிசை எனக்கு பிடிச்ச ஒன்னு, தன்னோட 25வது படத்துல நடிக்காம முதல்முறையா தனி இயக்குனரா மட்டும் செய்ல்பட்டு பார்த்திபன் ஜெயிச்சுருக்காருன்னுதான் சொல்லனும். அவருக்கு யார் சொன்னாங்கன்ன்னு தெரியலை, இப்ப படம் பார்க்க வர மக்கள் என்ன எதிர்பார்க்கறாங்கன்னு ஓரளவுக்கு தெரிஞ்சுக்கு. படத்துக்கு வர ஜனங்க எதிர்பார்க்கறது ரொம்ப பெரிய கதைலாம