கதை திரைக்கதை வசனம் இயக்கம் - விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், அது என்னமோ தெரியலை, மத்த விஷயங்களை விட சினிமா எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு விஷயம், சினிமாக்கு அப்புறம்தான் நம்ம வாழ்க்கைல தொலைக்காட்சி வந்தது, சினிமா,அன்றாட செய்திகளைதான் முக்கிய கருவா வச்சு எல்லா சேனல்லும் செயல்பட்டுகிட்டு வருது, அதுலயும் முக்கியமா சினிமால என்ன நடக்குதுங்கறதை மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கறதைத்தான் அவங்க முதல் கடைமையா செய்யறாங்க, எதுக்கு இதெல்லாம் சொல்றன்னா அப்படி தமிழ் மக்கள்கிட்ட முக்கியமா இணைஞ்சுருக்க சினிமால ஜெயிக்கறதுக்காக ஒவ்வொருத்தரும் வித்தியாசமா ஏதாவது ஒன்னு செஞ்சுகிட்டே இருக்காங்க, வித்தியாசமா செஞ்சு ஜெயிச்சவங்கள்ல முக்கியமான ஒருத்தர் "பார்த்திபன்"

பாரதிராஜா-பாக்யராஜ்-பார்த்திபன் - கரு.பழனியப்பன் இந்த வரிசை எனக்கு பிடிச்ச ஒன்னு, தன்னோட 25வது படத்துல நடிக்காம முதல்முறையா தனி இயக்குனரா மட்டும் செய்ல்பட்டு பார்த்திபன் ஜெயிச்சுருக்காருன்னுதான் சொல்லனும். அவருக்கு யார் சொன்னாங்கன்ன்னு தெரியலை, இப்ப படம் பார்க்க வர மக்கள் என்ன எதிர்பார்க்கறாங்கன்னு ஓரளவுக்கு தெரிஞ்சுக்கு. படத்துக்கு வர ஜனங்க எதிர்பார்க்கறது ரொம்ப பெரிய கதைலாம் இல்லை, போரடிக்காத காட்சிகள் மட்டும் போதும்.

நான் காலேஜ் படிக்கும் போது பர்சனால்டி டெவலப்மென்ட் கிளாஸ்ல எல்லா ஸ்டூடண்ட்டும் கண்டிப்பா ஏதாவது ஒரு தலைப்புல ஆங்கிலத்துல பேசியே ஆகனும்னு சொன்னாதும் ரூம்ல ஆளுக்கொரு தலைப்பு எடுத்துகிட்டு அதை டெவலப் ப்ண்ணி எழுதி வச்சு மனப்பாடம் பண்ணிகிட்டு இருந்தோம், கிளாஸ்ல ஒவ்வொருத்தரா மனப்பாடம் பண்ணி வச்சத தட்டு தடுமாறி பேசனப்ப, என் நண்பன் சிவா நாங்க ரூம்ல எப்படிலாம் மனப்பாடம் பண்ணி, சொதப்பி தயாராகிட்டு வந்தோம்ங்கறதையே எங்க பேரோட 2 பக்கத்துக்கு பேசிட்டு வந்துட்டான். அதே மாதிரி தான் படத்துல கதைய தயார் செய்ய போராடுற உதவி இயக்குனர்களோட வாழ்க்கையின் ஒரு அங்கத்தையே கதையா சொல்லிட்டாங்க.


இந்த படத்தை பத்தி சொல்றதுக்கு நிறைய இருக்கு, நீங்க நிறைய படம் பார்க்கறவங்களா இருந்தா உங்களுக்கு இந்த படம் பிடிக்கும், அதுவும் இல்லாம படத்துல பார்த்திபனோட டச், அவரோட முத்திரை தெளிவா பல இடங்கள்ல தெரியுது.


கதை தயாரிக்க போராடுற ஹீரோ, அவர் கூட இருக்க குழு, அதுல ரொம்ப வருஷமா சினிமாவுல இருக்க தம்பி ராமையா, அவரோட காதல் மனைவி, அவரை ஒரு தலையா காதலிக்கற பெண் மொத்தமா இவ்வளவுதாங்க படத்துல வர கதாபாத்திரங்கள்.

சினிமாவ பத்தி இவங்க பேசிக்கற விவாதிக்கற காட்சிகள் சுவாரசியமாதான் போகுது, அதனாலயே நமக்கு கதை பெருசா தேவைபடறது இல்லை, இருந்தாலும் இடைவேளைக்கு முன்னாடி பார்த்திபன் படத்தோட இயக்குனராவே  வந்து செகன்ட் ஆஃப்ல வரதை சொல்லி ஒரளவுக்கு டெம்போவ ஏத்தறார்.

என்னன்னமோ யோசிச்சு வராத கதைக்கு பதிலா, அவரோட சொந்த வாழ்க்கைல கொஞ்ச காலத்துக்குள்ள நடக்கற பிரச்சனைகளை ஒண்ணா சேர்த்து ஒரு கதையா ரெடி பண்ணிடறார். அதை தயாரிப்பாளர் ஏத்துகிட்டாரா இல்லையாங்கறதுதான் படத்தோட க்ளைமாக்ஸ்.


படத்துல வர தயாரிப்பாளர் சொல்ற மாதிரி "படத்தை க்ளைமாக்ஸ்ல முடிக்கறோம், என்ன ஆனாலும் சரி படத்தை க்ளைமாக்ஸ்ல முடிக்கறோம்"னு ஒரு க்ளைமாக்ஸ் வச்சுருக்காங்க.

படத்தை பாசிட்டிவாவோ நெகட்டிவாவோ முடிச்சுருந்தா வழக்கமான படமாயிரும்ங்கறதால அதை மாத்தி க்ளைமாக்ஸ் வச்சுருக்கார், அதை ஜனங்க ஏத்துக்கறாங்களானு பார்ப்போம்.


படத்துல வர 2 நாயகியும் நல்லாதான் இருக்காங்க, அவங்களுக்கு புடவை கட்டி விட்டது பார்த்திபனாதான் இருக்கும்ங்கறது அவரோட படங்களை பார்க்கறவங்களுக்கு நல்லா தெரியும், அதே மாதிரி முகத்துல மஞ்சளும் பெரிய பொட்டும் பார்த்திபனோட டச், இதெல்லாம் கூட ஓகே, அங்கங்க வசனங்களும் அவரோட பேரை சொல்லுது.

அமலா பாலை மட்டும் பார்க்க சகிக்கலை, அஞ்சான் படம் சரியா போகததால இந்த படம் நல்லா போகும்னு சொல்றவங்களுக்கு நான் சொல்ல விரும்பறது அஞ்சான் பிடிச்சு வச்சுகிட்ட தியேட்டர்லாம் இவங்களுக்கு கிடைச்சுருந்தா படம் இன்னும் அதிகமா வசூல் பண்ணிருக்கும்னு தோணுது.


கண்டிப்பா எல்லாரும் பார்க்க வேண்டிய படம், கேப் விடாம பேசிகிட்டே இருந்தாலும் படம் போரடிக்கலை.

படத்தோட ட்ரெய்லர்



Comments

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்

கலாய்ச்சுட்டாராமாம்...