ஏண்டா டகால்டி-CTS SEN

அன்பர்களுக்கு வணக்கம், கல்லூரி நண்பர்கள் பற்றி எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, இன்று நண்பனின் பிறந்தநாள், அவனை பற்றி பேச மனம் விழைகிறது, அவனுக்கு அருமையான தமிழ் பெயர் "செந்தமிழ்", பொதுவாக ஒவ்வொரு மனிதனையும் பிடித்தவர்கள் இருப்பது போல் பிடிக்காதவர்களும் இருப்பார்கள், எனக்கு தெரிந்து என்னுடன் கல்லூரியில் படித்த அனைவருக்கும் இவனை பிடிக்கும்.செந்தமிழை நினைத்தாலே மனம் குதுகலமடையும், ஒல்லியான உருவம், சிரித்த களையான முகம், அப்பப்போ தாடி வைப்பாறு, முக்கியமானது இவனுடைய உடல்மொழி, இரண்டு தோள்பட்டையையும் தூக்கி ஆட்டி "ஏண்டா டாய், டகால்டி" என்றால் அதை நினைத்து நான் இரண்டு நாள் சிரித்து கொண்டிருப்பேன்.



அவனது தந்தை  மத்திய வங்கி வேலையில் இருந்ததால், அவனது குடும்பம் வட இந்தியாவில் இருக்க, இவன் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தான். இவன் பெயர் முதலாம் ஆண்டு எல்லாரிடமும் பிரபலமானதே சுவாரசியமான முறையில்தான், முதல் செமஸ்டர் தேர்வு எழுதி விட்டு மெஸ்ஸுக்கு சாப்பிட வந்த எல்லோரிடமும் "மச்சி, நீ பாஸ் ஆகிருவியா? எனக்கு போயிரும்னு பயமா இருக்குடா" என ரொம்ப அப்பாவாக முகத்தை வைத்து கொண்டு புலம்பானான், ஆனால் ரிசல்ட்  வந்த அன்று எல்லோரும் இவனை வெறி பிடித்து துரத்தினார்கள் "ஏனென்றால் இவனை தவிர எல்லோருக்கும் அர்ரியர் விழுந்திருந்தது"

மூன்றாம் வருடம் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து கல்லூரி அருகில் வீடு எடுத்து தங்கினோம், அங்கு பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்தன, ஒன்றினை சொல்கிறேன், நண்பன் ஒருவனுக்கு பிறந்த நாள், வழக்கம் போல நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி ஒருவர் முகத்தில் ஒருவர் பூசி, துரத்தி பிடித்து விளையாடி கொண்டிருந்தோம், செந்தமிழ் மீது பூசுவதற்காக சிவா துரத்த இருவரும் ஓடிப்போய் ரொம்ப நேரம் ஆனது, நாங்கள் ரூம் முழுவதும் இறைந்து கிடந்த கேக்கை கழுவி விட்டு, மொட்டை மாடியில் குளித்து கொண்டிருந்தோம், திடிரென பார்த்தால் செந்தமிழும் சிவாவும் அமைதியாக ஒன்றாக நடந்து வந்தார்கள், "என்னடா இது!!!!?" என்று ஆச்சர்யமாக பார்த்தால் இவர்களை தொடர்ந்து ஒரு போலிஸ் SI பைக்கில் வந்தார், உடனே மொட்டைமாடியில் இருந்த எல்லோரும் தரையோடு தரையாக படுத்து விட்டோம், வந்த போலிஸ் Birthday boyஐ கூப்பிட்டு ஏதோ கடிந்துவிட்டு சென்றார்.

என்ன நடந்திருக்கிறது என்றால், செந்தமிழ் சிவாவுக்கு பயந்து ஒரு புதரின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்து, அவன் கடந்து சென்றதும் மின்னலென எழுந்து சாலையின் குறுக்கே ஓட, இவனுக்கு செங்குத்து திசையில் இரவு ரோந்து வந்து கொண்டிருந்த போலிஸ் இவன் சடாரென பாய்ந்ததால் பயந்து வண்டியோடு கீழே விழுந்துவிட்டார், பின் எழுந்து இவனை பிடித்து விசாரித்து, துரத்தி கொண்டு வந்த சிவாவை "ரேக்கிங்"கில் கைது செய்துவிடுவதாக மிரட்டி இருவரையும் அழைத்து வந்து பிறந்தநாள்காரனை எச்சரித்துவிட்டு சென்றிருக்கிறார். அந்த நிகழ்வை அந்த இடத்தில் இருந்த யாராலும் மறக்க முடியாது, இப்போது நினைத்தாலும் வெடி சிரிப்பு வருகிறது.

எங்கள் வகுப்பிலும் இரண்டு கோஸ்டி இருந்தது, ஆனால் அதிகம் முட்டி கொண்டதில்லை, அதற்கும் நேரம் வந்தது, Department secretary election, குறைந்தபட்ச தகுதி All clear studentஆக இருக்க வேண்டும், துரதிர்ஷ்டவசமாக எங்கள் பக்கம் அப்படி யாரும் இல்லை. எப்போதும் நடுநிலைவாதியாய் இருக்கும் செந்தமிழ் எங்களிடம் சிக்கினான், அவனை மூளைச்சலவை செய்து எங்கள் சார்பாக நிற்க வைத்து ஜெயிக்க வைத்தோம், அதன் பின் அவனது பதவியை வைத்து நாங்கள் ஆடாத ஆட்டம் ஆடி, எங்கள் சார்பாக எதற்கெடுத்தாலும் அவனை அலைய விட்டோம், ஒரு நள்ளிரவில் அரை தூக்கத்தில் எழுந்து பார்த்தால் விட்டத்தை நோக்கி கொட்ட கொட்ட விழித்து கொண்டிருந்தான், என்னவென்று கேட்டதற்கு "டேய், ரொம்ப தப்பா இருக்குடா, என் பதவியை எல்லாரும் தப்பா பயன்படுத்திக்கறாங்க, ராஜினாமா செய்யலாம்னு இருக்கேன்"னு சொன்னான், "சரிடா, பண்ணிக்கலாம்"னு அவனை தூங்க சொன்னேன், அந்த விஷயத்தை நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கலை,சொல்லிருந்தா அவனை மறுபடியும் பேசியே பதவில இருக்க வச்சுருப்பாங்க, சொன்ன மாதிரியே ராஜினாமா பண்ணிட்டான், அடுத்த வந்த தேர்தல்ல எங்களுக்குள்ள நடந்த கோஸ்டி தகறாறுல நாங்க தோத்துட்டோம், ஆனா நள்ளிரவில் அவனை தூங்க விடாம எழுப்பின அவன் நேர்மையை என்னால் எப்பவும் மறக்க முடியாது.

செந்தமிழ்க்கு பேய்னா பயம், எனக்கு கொஞ்சம் பயம், ஒருதடவை தெரிஞ்ச மெடிக்கல் ஸ்டூடண்ட்கிட்டருந்து மண்டைஓடு ஒண்ணு வாங்கி ஒரு பிளாஸ்டிக் கவர்ல போட்டு ரூம்க்கு கொண்டு வந்து எல்லார்கிட்டயும் "தேங்காய்பன் வாங்கிட்டு வந்துருக்கோம்,யாரும் இப்ப எடுக்காதிங்க,மிட்நைட்ல பசிச்சா சாப்பிட்டுக்கலாம்"னு சொல்லிட்டு வச்சோம், எதிர்பார்த்த மாதிரி செந்தமிழ் எனக்கு பசிக்குதுனு போய் கவர எடுத்து உள்ளே கைய விட்டு எடுத்து மண்டை ஓட பார்த்து அவன் போட்ட சத்தத்துல முருகன் பயந்து ரூமை விட்டு ஓடிட்டான், அப்புறம் என்ன எல்லாரும் சேர்ந்து என்னை திட்டினாங்க.

நாங்க தங்கி இருக்க ரூம்ல இருந்து ARRS multiplex theatre பக்கம்ங்கறதால படத்துக்கு போறப்ப நடந்துதான் போவோம், Final destination-4க்கு போறப்ப கன்னன் அவனோட TVS XLல வந்துருந்தான், அதுல ஒருத்தன் மட்டும்தான் போக முடியும்னதும் செந்தமிழ் போட்டி போட்டுகிட்டு கூட போனான், படம் முடிச்சு வரப்பவும் parkingக்கு 5₹ நான்தான் கொடுத்தேன், அதனால் நான்தான் வண்டில வருவேன்னு ரூல்ஸ் பேசி வண்டில போனான், நாங்க நடந்து போனோம், கொஞ்ச தூரம் போனதும் பார்த்தா 3-ரோடுகிட்ட ஒரு போலிஸ்காரர்கிட்ட 2 பேரும் கைகட்டி நின்னுகிட்டு இருந்தாங்க, எங்களுக்கு சிரிப்பு தாங்கலை, கிட்டதட்ட 3km நடந்து நாங்க ரூம்க்கு போனப்புறம் வந்து சேர்ந்தாங்க, எதுக்குடா போலிஸ் பிடிச்சதுனு கேட்டா, அந்த போலிஸ் சும்மா இவங்க வண்டி நம்பர் நோட் பண்ணிகிட்டு அனுப்பிருக்கு, கன்னன் வாய் சும்மா இருக்குமா? "எதுக்கு சார் நம்பர் நோட் பண்றிங்க?"னு விசாரிக்க, ஏற்கனவே போதைல இருந்த போலிஸ் கடுப்புல இங்கேயே நில்லுங்கடானு நிக்க வச்சுட்டார், அந்த இடத்துல செந்தமிழ் புலம்பனதுதான் ஹைலைட்,
 "வெறும் 5₹ பார்க்கிங்க்கு பணம் கொடுத்தது வீணா போக கூடாதுனு உன்கூட வண்டில வந்ததுக்கு என்னை நட்டநடு ராத்திரில நடுரோட்ல நிக்க வச்சுட்டியேடா கண்ணா டேய்"

ஒட்டு மொத்த சோனா காலேஜ் 2004-08 batchல முதல்ல place ஆனது செந்தமிழ்தான், எந்த கம்பெனினு கேட்கறிங்களா? "Indian military force" தெரியாத்தனமா செலக்ட் ஆனான், அப்புறம் அவன் CTS(cognazent)ல place ஆனதும் அவனை எல்லாரும் CTS senனுதான் கூப்பிடுவோம், பையன் இன்னமும் அங்கதான் இருக்கான், நல்லாரு மச்சி

-வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்
வருத்தபடாத மாணவர் சங்கம்

Comments

Post a Comment

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

கலாய்ச்சுட்டாராமாம்...

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்